விஜய்சேதுபதி மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம் இது தான்..! பிரபல நடிகர் பேச்சு..!

விஜய் சேதுபதி, துவக்கத்தில் துணை பாத்திரங்களில் நடித்து பிறகு நடிகராக அறிமுகமானவர். குறிப்பாக அவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தென்மேற்கு பருவக்காற்று, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி போன்ற சில படங்களில் நடித்த பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றார்.

விஜய் சேதுபதி

தொடர்ந்து தர்மதுரை, சேதுபதி, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்துக்கு பிறகு திடீரென வில்லன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

வில்லனாக…

குறிப்பாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். அதைத் தொடர்ந்து ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். பிறகு விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். கடந்த ஆண்டில் ஜவான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்துவிட்டு வந்துவிட்டார்.

கேமியோ ரோலில்…

அது மட்டுமின்றி பல படங்களில் கேமியோ ரோலில் வந்து செல்கிறார். சில படங்களில் வில்லன், சில படங்கள் கதாநாயகன், சில படங்கள் கௌரவ தோற்றம், சிறப்பு தோற்றம் என தனது ரசிகர்களையே ஒரு கட்டத்தில் குழம்பிப் போக செய்துவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

இப்படி ஹீரோவாக நடிப்பவர், தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் வில்லன், ஹீரோ என்று மாறி மாறி நடித்த விரைவில் மார்க்கெட் இழக்க நேரிடும் என்று பிரபல நடிகர் ஒருவர் இது குறித்து பேசி உள்ளார்.

ஹீரோ வில்லனாக கூடாது

விஜய் சேதுபதி மார்க்கெட் காணாமல் போனதற்கு அவர் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது தான் காரணம். வில்லனாக நடித்த நடிகர் ஹீரோவாகலாம்; ஆனால், எக்காரணம் கொண்டும் ஹீரோவாக நடித்த நடிகர் வில்லனாக கூடாது. அப்படியானால் அவருடைய மார்க்கெட் சரிந்து விடும் என்பது வரலாறு.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி அதனை கவனத்தில் கொள்ளாமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். அது அவருக்கு செட் ஆனது. அதன் பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் தான் இவருக்கு செட் ஆகும் என முடிவெடுத்து விட்டார்கள்.

இதைவிட இன்னும் ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. அதுதான் ஒரு படத்தை முடிக்காமலேயே அடுத்த அடுத்த படங்களை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கியது.

எதிர்பார்ப்பு என்ன?

மார்க்கெட் நல்ல நிலையில் உள்ள நடிகர்கள் சினிமா களம் எப்படி இருக்கிறது. ரசிகர்கள் எப்படியான படத்தை ரசிக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு என்ன ஆகியவற்றை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பத்து படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு படம் என்று நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: என் மேல அந்த உணர்ச்சி இல்லனா.. கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல.. போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

எதுவுமே தெரியாமல்…

அவர்களுடைய ரசனை எப்படி இருக்கிறது. நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என எதுவுமே தெரியாமல், அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்க வேண்டிய சூழலில் தான் இருக்க வேண்டும்.

மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம்…

அந்த சூழலில் தான் நடிகர் விஜய் சேதுபதி சிக்கிக்கொண்டார். ஒரு படம் வெளியாகும் முன்பு, அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆவது என்பது நடிகர்களுக்கு நல்லது கிடையாது. நடிகர் விஜய் சேதுபதி அதை செய்தார். அதனால் அவருடைய மார்க்கெட் காலியாகிவிட்டது என பேசி இருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இதையும் படியுங்கள்: கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

விஜய்சேதுபதி மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம் வில்லனாக நடித்தது தான் என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.