அந்த இயக்குனரிடம் மட்டும் பம்மும் விஜய் சேதுபதி.. இது தான் காரணமாம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்த மூன்று வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்ற சூழ்நிலையில் இருக்கின்றார்.

அந்த அளவுக்கு படங்களில் கமிட்டாகி உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி எந்த இயக்குனர்கள் வந்தாலும் கால்ஷீட் இல்லை மூன்று வருடம் கழித்து பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஒரே ஒரு இயக்குனரிடம் பம்முவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருடத்திற்கு 6 முதல் 10 படங்கள் கொடுத்துவிடும் நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏனென்றால் வரக்கூடிய அனைத்து பட வாய்ப்புகளையும் வாரி போட்டுக் கொள்கிறார்.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக மற்றும் துணை நடிகராக நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி அளிக்கிறது ஆனால் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் ரசிகர்களை கவருவதை தவறவிடுகின்றது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அவர் வில்லனாக நடிக்கிறார் ஹிட் கொடுக்கிறார்.. மறுபடியும் ஹீரோவாக படம் பண்றார்.. ப்ளாப் கொடுக்கிறார்.. ரிப்பீட்டு.. என்பதுபோல நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்பயணம் இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது வெப்சீரிஸ்களில் நடிப்பது சினிமாவில் நடிப்பது என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வரும் நடிகர் விஜய் சேதுபதி இவ்வளவு பிஸியான நிலையிலும்  விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோருக்கு மட்டும் படம் பண்ணித் தருவதாக வாக்கு கொடுத்துள்ளாராம்.

கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் மூன்று வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை அதுவரைக்கும் உங்களால் காத்திருக்க முடியும் என்றால் கதையை கூறுங்கள் என்று எடுத்த எடுப்பில் கண்டிசன் போடும் நடிகர் விஜய் சேதுபதி விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோருக்கு மட்டும் எந்த கண்டிஷனும் போடாமல் படம் பண்ணித் தருவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் மும்பையில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதையைக் கூறிய புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரிடம் கண்டிப்பாக படம் பண்ணித் தருவதாக ஒப்புதல் கொடுத்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

இந்த படம் விரைவில் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …