விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவிற்கு தொகுப்பாளராக பணி புரிந்த கமலஹாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
உலகநாயகன் ஆண்டவர் என்ற நிகழ்ச்சியில் வேட்டைய ஆரம்பிக்கலாமா? என்று கேட்டபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய பக்குவத்தாலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று உருவானார்கள்.
பிக் பாஸ்..
மேலும் இந்த பிக் பாஸ் வீட்டை பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்த போதும் அவற்றையெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் கமலை மட்டுமே மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசங்களை கடந்துள்ளது.
மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல போட்டியாளர்கள் திரையுலகில் தற்போது பிரபலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தங்களுக்கு என்று ஒரு இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதை அடுத்து மக்கள் இனி இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினால் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தற்போது புரியாத புதிராகி கண்ண கட்டி காட்டில் விட்டது போல் பலருக்கும் உள்ளது.
பிக் பாஸ் கமல் இல்லைனா வேற யாரு..
அந்த அளவு பிக் பாஸ் என்றால் உலகநாயகன் கமலஹாசன் மட்டும் தான் என்று மனதளவு மட்டுமல்லாமல் மூளையிலும் பதிந்து போய் இருப்பதால் இதை அடுத்து யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி தற்போது பல மத்தியிலும் பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
மட்டுமல்லாமல் எவ்வளவு சீரியல் வந்தாலும் சனி ஞாயிறு என்றால் கமல் நம் வீட்டுக்குள் இருந்து பேசுவது போல ஏழு ஆண்டுகள் பழகிப்போன நமக்கு வேறு ஒருவர் எந்த நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்க முடியவில்லை என்று பலரும் புலம்பித் தவிக்கிறார்கள்.
இதை அடுத்து கமலின் இடத்தை யாருமே விப்ரஸ் பண்ண முடியாது என்ற மனநிலையில் இருக்கும் பலரும் இரு விஜய் டிவிக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்ட காலம் என்பதை சொல்லி புலம்பி வருகிறார்கள்.
சீக்ரெட் ஒப்பந்தம் போட்ட வசூல் நாயகன்..
இதனை அடுத்து கமலுக்கு பதிலாக ஒருவரை கொண்டுவரும் பட்சத்தில் அவரின் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ரீதியில் தற்போது பட்டிமன்றமே நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கிய சிம்பு இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ் சூர்யா சரத்குமார் என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் பார்த்திபன் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று உறுதிபட தகவல்கள் வெளி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் நடிகர்களை தாண்டி நடிகைகளான ரம்யா கிருஷ்ணன் நயன்தாரா என்று நடிகைகளின் லிஸ்ட்டும் ஒவ்வொன்றாக வெளிவரும் போது இனி விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் டிவி ஒரு நடிகரை லாக் செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்தத் தகவலில் விஜய் டிவியின் ஒப்பந்த பத்திரத்திலேயே அவர்கள் கையெழுத்து போட்டு விட்டதாக செய்திகள் கசிந்ததை அடுத்து சமீபத்தில் மகாராஜா படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்த விஜய சேதுபதி தான் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்போது தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது பற்றி உறுதியான தகவல்கள் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.
இனி கமலின் இடத்தில் விஜய் சேதுபதியை வைத்து மக்கள் கொண்டாடுவார்களா என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியவரும்.