“பீஸ்ட்” ட்ரெய்லரை வைத்து SUN TV-யை சீண்டும் VIJAY TV..! – வீடியோ வெளியிட்டு கலாய்..!

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ளது.

அதனை முன்னிட்டு இன்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு சில தினங்கள் முன் அறிவித்தது. அதன்படி ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் அறிவிப்பு போஸ்டரிலேயே, விஜய் மாஸ்க் என வித்தியாசமாக தோன்றினார். அதேபோல் இதிலும் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார். ட்ரெய்லரில் முழுக்க விஜய் ஆக்‌ஷன் மோடிலேயே இருக்கிறார்.

இதையும் படிங்க : ஜட்டி பட்டி வெளியே தெரிய.. பொதுவெளியில் நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இது இப்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வெளியான பதினைந்து நிமிடங்களிலேயே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. டிரைலரை பார்த்து, நெட்டிசன்கள், இந்த படத்தின் கதை யோகி பாபுவின் படமான கூர்கா படத்தின் காபி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதனால், ஏற்கனவே விஜய் ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். இந்நிலையில், விஜய் போட்டுள்ள டுவிட் அவர்களை மேலும் சூடேற்றும் வகையில் உள்ளது. அந்த பதிவில், இந்த படத்தை எத்தன பேருக்கு பிடிக்கும் என்று கேட்டு கூர்கா படத்தின் காட்சியை விஜய் டிவி பதிவு செய்துள்ளது.

இது பீஸ்ட் படத்தை கலாய்க்கும் படி இருப்பதாக விஜய் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …