விஜய் டக்கர் டிவி வந்தாச்சானுனா… சன் டிவி நவுத்து போன புஸ்வானமா….ஆயிடுமா? விஜய் டிவியின் மாஸ்டர் பிளான்!

விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட சன் டிவி தற்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்து மக்கள் மத்தியில்  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. சன் டிவியில் சன் மியூசிக்,  சன் மூவிஸ், சுட்டி சேனல் போல பல இணை சேனல்களை பல மொழிகளில் கொண்டு இயங்கி வருகிறது.

 இந்த சேனலுக்கு போட்டியாக துவங்கப்பட்ட விஜய் டிவியும் சில நாட்களிலேயே சன் டிவிக்கு இணையான வளர்ச்சியைப் பெற்றது. இதில் வித்தியாசமாக கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளால் இளைஞர்கள் பெருமளவு ஈர்க்கப்பட்டார்கள் .மேலும் இந்த டிவி சன் டிவி யோடு எப்போதும் மிகவும் கடுமையான காம்படிஷன் கொடுப்பது  வாடிக்கையாகிவிட்டது.

 இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் சன் டிவி தொடர்களுக்கு  இணையாக இப்போது ரசிகர்களை பெற்று வரக்கூடிய வேலையிலே டிஆர்பி ரேட்யை சன் டிவிக்கு நிகராக கொண்டுவருவதற்கு திணறுகிறது.

 இந்த சூழ்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஆன சுந்தரி, வானத்தைப்போல,  கயல், கண்ணான கண்ணே, ரோஜா போன்ற சீரியல்களுக்கு இணையான ரசிகர்களை பெறமுடியாமல்  என்ன செய்வது என்று யோசித்த விஜய் டிவி தற்போது ஒரு மாஸ்டர் ப்ளானை கையில் எடுத்துள்ளது.

 ரியாலிட்டி ஷோக்கள் ஆன பிக் பாஸ், கலக்கப்போவது யாரு, நீயா நானா, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் டிஆர்பி ரேட்டை கூட்டி இருந்தாலும் இன்னும் சன் டிவிக்கு இது இரண்டாவது இடத்திலேயே இருக்கிறது.

---- Advertisement ----

 இதற்கு காரணமாக விஜய்டிவி கருதுவது சன் டிவியை சேர்ந்த பல சேனல்கள்  இருப்பதால் தான் என்னவோ அவற்றின் டிஆர்பி ரேட்டை எட்டிப் பிடிப்பதற்கு சிறிது காலம் எடுக்கிறது அல்லது இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது. எனவே தாங்களும் ஒரு புதிய சேனலை  கொண்டு வருவதின் மூலம் இந்த டிஆர்பி ரேட்டை சமன் செய்ய முடியும் என்ற சூப்பர் பிளானை இப்போது கையில் எடுத்து செயல்படுத்த உள்ளது.

இதற்கான அடிப்படை வேலைகளில் களம் இறங்கி மிகவும் மும்முரமாக வேலை செய்து வருகிறது. ஏற்கனவே விஜய் டிவி  சில வருடங்களுக்கு முன்னால் விஜய் மியூசிக் என்ற சேனலை அறிமுகப்படுத்தி தற்போது வெற்றிநடைபோட்டு வருகின்ற சூழலில் மீண்டும் ஒரு புதிய சேனலை அறிமுகம் செய்வது  அவர்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்கத்தான். எந்த சேனலில் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் விளையாட்டுப்போட்டிகள், பொது அறிவுப் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள் என வகை வகையான நிகழ்ச்சிகளைத் தொகுத்து சன் டிவியை  பின்னுக்கு தள்ள  தயாராகி வருகிறார்கள்.

---- Advertisement ----