விஜய்-க்கு BJP கொடுத்துள்ள ASSIGNMENT – வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்..!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

மால் ஒன்றை கைப்பற்றி மக்களை தீவிரவாதிகள் பணையக்கைதிகளாக வைத்திருப்பதும், அவர்களிடமிருந்தும் மக்களை நடிகர் விஜய் மீட்பதும் என கதை நகரும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வலைப்பேச்சு என்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான பேச்சாளர் பிஸ்மி சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் இதுவரை யாரும் யூகித்து கூட பார்க்க முடியாத.. ஒருவேளை உண்மையாக இருக்குமோ என எண்ணக்கூடிய அளவில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது, நடிகர் விஜய்க்கு பாஜக ஒரு அசைண்மென்ட் கொடுத்துள்ளது. அது என்ன அஸைன்மென்ட் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சமீபத்தில், புதுவை முதல்வர் திரு.ரங்கசாமி நடிகர் விஜய்யை சந்தித்தார்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ரங்கசாமி விஜய்யை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன..? ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜக-வின் கைப்பாவையாக இருக்கும் கட்சி என்பது நமக்கு தெரியும்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் என்.ஆர்.காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். இன்றைய சூழழில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவின் பினாமியாக தான் செயல்பட்டுக்கொண்டிருகின்றது.

அப்படி இருக்கையில், விஜய் உடனாக ரங்கசாமியின் சந்திப்பு “அரசியல் நிமித்தமான சந்திப்பு அல்ல” என்று புதுவையின் பாஜக தலைவர் நமச்சிவாயம் கூறுகிறார்.

நடிகர் விஜய், ரங்கசாமி சந்திப்பை பற்றி ஒன்று விஜய் அறிக்கை கொடுக்க வேண்டும்.. அல்லது ரங்கசாமி அறிக்கை கொடுக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், எங்கயோ இருக்க, பாஜக தலைவர் நமச்சிவாயம் மறுப்பு அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாஜக விஜய்க்கு அஸைன்மென்ட்-ஐ நிறைவேற்றுகிற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது என்னுடைய அனுமானம் தான். உண்மை என்னவென்று யாருக்கும் தெரியாது.

என்னுடைய பார்வையில் எனக்கு தோன்றிய விஷயத்தை நான் பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார் பிஸ்மி.

காவியை கிழித்த விஜய்…

பீஸ்ட் படத்தில் காவியை கிழித்த விஜய் என்று கூறுகிறார்களே..? என்ற கேள்விக்கு… காவியை கிழித்தார் விஜய் என்பது முட்டாள் ரசிகர்களின் திரைக்கதை தான் அவர்களுடைய என்ன ஓட்டத்துக்கு ஈடாக ஒரு காட்சி இருக்கும் போது முட்டாள் தனமாக பிதற்றுகிறார்கள்.

அதே ரசிகர்கள், நான் அரசியல்வாதியல்ல.. என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறார்களா..? கிடையாது.

இன்று சன்பிக்சர்ஸ் படத்தில் நடிக்கும் விஜய்க்கு காவலன் படம் வெளியான போது திமுக எப்படி எல்லாம் பிரச்சனைகொடுத்தது என யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதற்காக, அதை தூக்கி கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறாறா விஜய்.. தற்போது அவர் சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கவில்லையா..?

அது போல தான் மெர்சல் படத்தின் போது பாஜக பிரச்சனை செய்தது என்பதற்காக அதையே தூக்கிக்கொண்டு சுற்றமாட்டார் விஜய். அவர் பாஜகவுக்கும் ஆதரவாக இருப்பார்.

பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லாஞ்ச் கிடையாது..? என்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் நடக்காததற்கு காரணம் படத்தில் ரெண்டே ரெண்டு பாடல் தான் அதை ஏற்கனவே யூ-ட்யூப்பில் ரிலீஸ் பண்ணிட்டாங்க..

அதுக்கு மேல பாடலே இல்லாத போது எதுக்கு ஆடியோ லாஞ்ச் என்று படக்குழு ஆடியோ லாஞ்ச்-ஐ கேன்சல் செய்து விட்டது என கூறுகிறார்கள்.

கடுப்பான உதயநிதி..

மறுபக்கம், நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரை சந்தித்தது திமுகவை பெரும் அளவில் அதிர்சியாக்கியுள்ளது. இதனால், கடுப்பான உதயநிதி ஆடியோ லாஞ்ச் எல்லாம் வேண்டாம் என சன் பிக்சர்ஸ்-ஐ கேட்டுக்கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால், இதுவும் பாஜக அசைன்மெண்ட் தான் காரணம் என நான் யூகிக்கிறேன்.

ஏன் என்றால், ஆடியோ லாஞ்ச் மேடைக்கு வந்தால் கண்டிப்பாக அரசியல் பேச வேண்டும். மறைமுகமாக, அரசியலை பேசியே தீருவார். இப்போது யாரை எதிர்த்து அரசியல் பேசுவது, மாநில அரசை பேசலாம் என்றால் பீஸ்ட் படத்தை தயாரித்ததே சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

மத்திய அரசை எதிர்த்து பேசலாம் என்றால் பாஜகவுக்கு எதிராக பேச முடியாத சூழலில் இருக்கிறார். அதனால் ஆடியோ லாஞ்ச்-ஐ கேன்சல் பண்ணி இருக்கலாம் என நான் நினைக்கிறன் என கூறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …