கேப்டன் விஜயகாந்தா இது..? – சமீபத்திய தோற்றத்தை பார்த்து சோகத்தில் ரசிகர்கள்..!

தீவிர அரசியலில் இறங்கிய பிறகும் அவ்வப்போது படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த் ( Vijayakanth ). உடல்நல குறைவு காரணமாக பல வருடங்களாக சினிமா பக்கம் அவர் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் அவர் விஜய் மில்டன் இயக்கிவரும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க சரத்குமார் சரண்யா பொன்வண்ணன் தலைவாசல் விஜய் உட்பட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

மேகா ஆகாஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மழை பிடிக்காத மனிதன் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.விஜயகாந்தின் உடல்நிலை ஓரளவு தேறினாலும் அவரால் முன்புபோல் ஆக்ஷன் அதிரடி காட்சிகளில் நடிப்பது இயலாது என்பதால் அதற்கேற்றபடி அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார்கள்.

மொத்தம் இரு தினங்கள் மட்டுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது மழை பிடிக்காத மனிதன் படக்குழு படத்தின் இறுதிக் காட்சியை படமாக்க டையூ டாமன் சென்றுள்ளது.

அங்குதான் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறார்கள். அங்கிருந்து திரும்பிய பிறகு விஜயகாந்த சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்க உள்ளனர்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கேப்டனா இப்படி ஆகிட்டாரு.. என்று சோகத்தில் உள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …