கேப்டன் விஜயகாந்த் – சற்று முன் MIOT மருத்துவமனையில் குவிக்கப்பட்ட போலீசார்..! – என்ன காரணம்..?

நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் பிரச்சனை காரணமாகவும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள காரணமாகவும் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.,

மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியான மருத்துவ குறிப்பின்படி விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை எனவும் விரைவில் நலம் பெறுவார் எனவும் கூறப்பட்டது.

தொடர்ந்து அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் தொண்டை குழாயில் துளையிட்டு அதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மருத்துவ குழு என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சற்று முன்பு திடீரென மியாட் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால் அந்த இடமே பரபரப்பானது. என்ன விஷயம் என்று விசாரித்த பொழுது விஜயகாந்தின் உடல்நிலை விசாரிக்க திரைப்பபிரபலங்கள் பலரும் மியாட் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர்.

அவர்களுடைய பாதுகாப்பிற்கும், மருத்துவமனையை சுற்றி தேவையற்ற கூட்டம் கூடி விடாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

இதனை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் தங்களுடைய வேண்டுதல்களை இணைய பக்கங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …