Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்

Tamil Cinema News

அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!

தமிழ் சினிமாவில், கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய ஒரு சாதனை நடிகராக, சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் அவர், உடல் நலக்குறைவால் 71வது வயதில் காலமானார்.

விஜயகாந்த்

மதுரையை சேர்ந்த விஜயராஜ், சினிமாவில் வாய்ப்பு தேடி நடிகராகும் ஆசையில், தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்தார். போராடி சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விஜயராஜ், சினிமாவில் நடிப்பதற்காக விஜயகாந்த் ஆக மாறினார்.

ஏற்கனவே கருப்பா, ஒரு ரஜினிகாந்த் இருக்கிறாரே, அப்புறம் எதுக்கு மறுபடியும் கருப்பா ஒரு விஜயகாந்த் என அவரை கிண்டலடித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அதிகம்.

ஆனால் அவர்களே ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் வீட்டு வாசலில், அலுவலக வாசலில் அவரது கால்ஷீட் கேட்டு தவம் கிடக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் விஜயகாந்த்.

ஊமை விழிகள், புலன் விசாரணை, செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர் என, விஜயகாந்தின் பல படங்கள் அவரது சினிமா பயணத்தில் மைல் கற்களாக அமைந்தன.

--Advertisement--

திரைப்படக் கல்லூரி மாணவர்கள்

திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே, பட வாய்ப்பு தராத அந்த காலகட்டத்தில் அவர்களுக்காக அதிகளவில் வாய்ப்பு கொடுத்து, திரைப்பட கல்லூரி மாணவர்களான பலரது வாழ்வில் ஒளியேற்றியவர். ஆர்கே செல்வமணி, ஆபாவாணன், ஆர்வி உதயகுமார் என பலரும் அப்படி சினிமாவுக்குள் வந்தவர்கள்தான்.

தன்னுடன் நடித்த பல நடிகர்களை மீண்டும் மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமையும் விஜயகாந்துக்கு உண்டு. நடிகர்கள் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், தியாகு, சரத்குமார், வடிவேலு, பொன்னம்பலம் என பலருக்கு வாய்ப்பளித்தவர் விஜயகாந்த் தான்.

கேப்டன்

துவக்கத்தில் விஜி என சக நடிகர்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த், பிறகு புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கேப்டன் என அழைக்க அதுவே நிரந்தரமானது.

தேமுதிக கட்சியை 2005ம் ஆண்டில் துவங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பிரளயத்தையே கேப்டன் ஏற்படுத்தினார்.

எதிர்கட்சி தலைவர்

அதிமுக, திமுக என்ற இரண்டு ஆளுமைகளை எதிர்த்து, விஜயகாந்த் நடத்திய எதிர்ப்பு அரசியலை பார்த்து மற்ற கட்சிகள் எல்லாம் மிரண்டு போயின. ஊழல், லஞ்சம் நிறைந்த இந்த கட்சிகளை எதிர்த்துக் கேள்வி கேட்க வந்த விஜயகாந்துக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்ததால், 2016 தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று எதிர் கட்சி தலைவராகவும் சட்டசபையில் அமர்ந்தார் விஜயகாந்த்.

இதையும் படியுங்கள்: வைரத்தால் செய்யப்பட்ட ப்ரா.. கண் கூசும் கவர்ச்சியில் “மாஸ்டர்” நடிகை மாளவிகா..!

ஆனால் தமிழக முதல்வராக அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் 6 ஆண்டுகளுக்கு மேல் பேச முடியாமல், நடக்க முடியாமல் உடல் இயக்கம் படிப்படியாக குறைந்து, கடைசியில் இந்த மண்ணை விட்டு மறைந்து போனார்.

உதவி கேட்பவர்களுக்கு தயங்காமல் உதவும் வள்ளல், பசி என்று வருவோருக்கு பசியாற்றிய கருணையாளர், துணிச்சல், தன்னம்பிக்கை மிக்கவர் என பல பெருமைகள் கேப்டனுக்கு உண்டு.

சண்முக பாண்டியன்

அவருக்கு பிரமேலதா என்ற மனைவியும், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது,

அப்பா இந்த உலகை விட்டு சென்றாலும் ஒவ்வொரு இடத்தில் அவரை நான் பார்க்கிறேன். வானத்தில் இருந்து என்னை பார்த்து சிரிப்பது போல மனதுக்குள் அடிக்கடி தோன்றுகிறது. அப்பா இறக்கவில்லை. இன்னும் மக்களோடு அவர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..

சத்திரியனாக வீட்டில் பார்த்திருக்கிறேன்

என் அப்பா எப்போதுமே, தன்னுடைய கம்பீரத்தை இழக்க விரும்ப மாட்டார். எழுந்து நிற்க முடியாத நிலையிலும், எழுந்து சைக்கிளிங் செய்வார். அவரை பல நேரங்களில் நான் சத்திரியனாக வீட்டில் பார்த்திருக்கிறேன்.

எப்போதுமே மனிதநேயத்துடன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் ஆசை. துவசி வாசம் மாறினாலும் மாறும், தவசி வார்த்தை மாறாது என்ற வார்த்தைகளை தன் வாழ்க்கையில் பின்பற்றியவர் அப்பா.

அப்பா சொன்ன வார்த்தை

அப்பா கடைசியாக சொன்ன வார்த்தை மனிதநேயத்துடன், மற்றவர்களுக்கு உதவிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். வாழ்நாள் முழுக்க அவரது வாழ்க்கையாகவே அது இருந்தது. அதை தான் அவரது பிள்ளைகளான நாங்களும் பின்பற்றுவோம் என, நெஞ்சை உருக்கும்படி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top