தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி ( Vijayalakshmi ) . தொடர்ந்து, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார்.இதனை தொடர்ந்து, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
இவர்களுடைய திருமணம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஃபெரோஸ், தூங்காநகரம், வல்லினம் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
இவர் இயக்கிய கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை படம் கடந்த வருடம் வெளியானது.விஜயலட்சுமி – ஃபெரோஸ் தம்பதியருக்கு நிலன் என்கிற ஒரு மகன் உண்டு.
படங்களில் அடக்க ஒடுக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை விஜய லட்சுமி. அதே நேரம் அதே இடம் படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார்.
ஆனால், அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார்.தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் அம்மணி என்பது தெரிகின்றது.
இந்நிலையில், தன்னுடைய சிவந்த உதடுகளின் அழகை க்ளோஸ் அப்பில் செல்ஃபி எடுத்து அதனை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? என்று வர்ணித்து வருகின்றனர்.