நான் அப்பவே சொன்னேன்.. கேக்கல.. கந்தசாமி இதனால தான் FLOP ஆச்சு..! போட்டு உடைத்த கலைப்புலி எஸ் தாணு..!

எந்த விஷயத்திலும், அதிக நேரத்தை செலவிட எவரும் விரும்புவதில்லை. அதனால்தான் முதலில் 50 ஓவர்களாக இருந்த கிரிக்கெட் கூட இப்போது 20 ஒவர் கிரிக்கெட்டாக மாறிவிட்டது.

இதற்கு காரணம் அவ்வளவு நேரம், ஒரு வெற்றி தோல்வியை அறிவதற்காக ரசிகர்கள் காத்திருக்க தயாராக இல்லை. விளையாட்டில் கூட அதிக நேரத்தை செலவ செய்த விரும்பாத ரசிகர்கள், சினிமாவில் மட்டும் இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய படத்தை அதிக நேரம் காட்டினால், அவர்களுக்கும் பொறுமை இருக்காது.

சில படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க காரணம், படம் சிறப்பாக இருந்தும் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதுதான். இது படம் வெளிவந்த பிறகுதான் பலருக்கும் புரிகிறது.

கந்தசாமி

நடிகர் விக்ரம் நடித்த பல படங்களில் மிக முக்கியமான படம் கந்தசாமி. இந்த படத்தை இயக்குனர் சுசி கணேஷ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் விக்ரம், ஸ்ரேயா, பிரபு, மன்சூர் அலிகான், வடிவேலு, ஆசிஸ் வித்யார்த்தி, ஒய் ஜி மகேந்திரா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

---- Advertisement ----

மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், தோல்வி படமாக அமைந்தது.

கலைப்புலி எஸ். தாணு
இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கந்தசாமி திரைப்படம் எதனால் பிளாப் ஆனது என்ற தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நான் கந்தசாமி படத்தின் இயக்குனரிடம் தெளிவாக கூறினேன். படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் பத்து நிமிடங்கள் வருகிறது. தியேட்டருக்கு படம் பார்க்க வரக்கூடிய ரசிகன், 3 மணி நேரம், 4 மணி நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும் அல்லது அடுத்த வேலையை பார்க்கச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வருவான்.

கட் செய்து விடுங்கள்

படமே மூன்று மணி நேரம், பத்து நிமிடம் இருந்தால் கண்டிப்பாக அவன் இதற்காக 5 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் ஒதுக்க வேண்டியது இருக்கும். படத்தை தயவுசெய்து இரண்டரை மணி நேரத்தில் முடிக்கும்படி, அதற்கேற்ப தேவையற்ற காட்சிகளை கட் செய்து விடுங்கள்.

இல்லையென்றால் படத்தின் தோல்விக்கு, படத்தின் நீளமே காரணமாகிவிடும் என்று கூறினேன். ஆனால் இயக்குனர் கேட்கவில்லை. நான் மீண்டும் ஒரு முறை அழுத்தி கூறினேன்.

நீதான் தேடி அலைய வேண்டும்

இந்த படம் ஓடவில்லை என்றால், விக்ரமுக்கு அடுத்த பட வாய்ப்பு வரும். படம் ஓட வில்லை என்றால் எனக்கும் அடுத்த பட வாய்ப்பு வரும். ஆனால் இயக்குனரான உன்னை யாரும் தேடி வர மாட்டார்கள். நீ தான் தேடி அலைய வேண்டியிருக்கும்,

தோல்விக்கு காரணம்

தயவு செய்து நான் சொல்வதைக் கேள் என கூறினேன். ஆனாலும் படத்தை அதே நீளத்துடன் ரிலீஸ் செய்தார். படம் நீளமாக இருக்கிறது என்றுதான் பிரதானமான குற்றச்சாட்டாக இருந்தது. இதுவே படத்தின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது என பேசியிருக்கிறார் கலைப்புலி எஸ் தாணு அவர்கள்

நான் அப்பவே சொன்னேன்.. கேக்கல.. கந்தசாமி படம் அதிக நீளமாக இருந்ததால் தான் FLOP ஆச்சு என்று போட்டு உடைத்திருக்கிறார் கலைப்புலி எஸ் தாணு.

---- Advertisement ----