மார்பின் மேல் குத்தியுள்ள… டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் – அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..!

“விக்ரம் வேதா” படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் மாதவனுடன் ரொமான்ஸ் செய்த யாஞ்சி, யாஞ்சி பாடல் இளசுகளை கிறங்கடிக்க, ஒரே பாடலில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, தல அஜித்தின் சூப்பர் ஹிட் படமான “நேர்கொண்ட பார்வை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்திலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் வெயிட்டான கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பலரும் ரெடியாக இருக்கிறார்களாம். ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் எடுத்துள்ள அதிரடி முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கஃபே ஒன்றை திறக்க உள்ளாராம்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷ்ரத்தா, தான் ஆரம்பிக்க உள்ள கஃபே சாதாரண கஃபேக்களை விட கொஞ்சம் பெரியது, ரெஸ்ட்ராண்ட்களை விட கொஞ்சம் சிறியது. நல்ல தூய்மையான உணவு மற்றும் சுகாதாரமான லைஃப் ஸ்டைலுக்காக தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த கஃபே நேற்று முதல் செயல்படவும் தொடங்கிவிட்டது.

அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஓட்டல், ரெஸ்டாரண்ட், பியூட்டி பார்லர்ஸ் நடத்துவது இது ஒன்றும் முதல் முறையல்ல. அதே வழியில் தான் ஷ்ரத்தாவும் சைடு பிசினஸ் தொடங்கியுள்ளார். தற்போது விஷாலுடன் இணைந்து “சக்ரா” என்ற படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,கவுன் போன்ற உடை அணிந்து கொண்டு மார்ப்புக்கு மேலே குத்தியுள்ள டாட்டு தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …