இந்தப் பெயருக்கு இவ்வளவு மவுசு இருக்கா இப்பத்தான் தெரிந்தது எனக்கு.

தமிழ் திரைத் துறையைப் பொறுத்த வரையில் விஜய் என்ற பெயரில் எண்ணற்ற நடிகர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக விஜயசேதுபதி, விஜய், ஆண்டனி விஜய்,  விஜய் யேசுதாஸ்   அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பெயரைக் கொண்டவர்கள் நன்றாக ஜெயித்தும் சிலர் இருந்த இடம் தெரியாமல் கூட போயிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக தற்போது  விஜய் பெயரை ஆரம்பமாக கொண்டு ஒரு நடிகர்  தமிழ் திரைக்குள் நுழைந்து இருக்கிறார்.

இவரது பெயர் விஜய் கனிஷ்கா இவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் விக்ரமனின் மகன்தான். கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் வெளிவர இருக்கக்கூடிய ஹிட் லிஸ்ட் படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள்  வந்திருக்கிறது இந்தப் படத்தை இயக்குபவர்  சூரியக்கதிர் என்று அழைக்கக்கூடிய கார்த்திகேயன்.

கே.எஸ் ரவிக்குமாரின் தயாரிப்பிலும் தனது இயக்கத்தில் வெளிவந்த சூரியவம்ச படத்தின் கதாநாயகனான சரத்குமாருடன் தனது மகனை அறிமுகப்படுத்தி வைக்கிறார் இயக்குனர் விக்ரம்.

படத்தைப் பற்றி குறிப்பிடும்போது இந்தப் படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் பல முக்கிய முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

தமிழ் ரசிகர்களின் மத்தியில் அவர்களின் மனதில் நிற்கக்கூடிய மிக பெரிய நல்ல படங்களைக் கொடுத்த மகன் விஜய் இந்த படத்தில் எப்படி பிரதிபலிப்பார்.  

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் தொடர்ந்து நடித்து வந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே வெற்றி  கிடைத்துள்ளது அவர்கள் மட்டுமே இன்றும் தொடர்ந்து இந்த திரையுலகில் ஜொலித்த வருகிறார்கள்.

அந்த வரிசையில் விஜய் கனிஷ் காவும் இந்த திரைப்படத்தின் மூலம் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருவார் என்பதை நாம் இந்த படம் வெளிவந்த பின்பு தான் உறுதி செய்ய முடியும்.

தனது பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கும் கனிஷ்கா இவருக்கு ஹிட் லிஸ்ட் படம்  ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமையவும் மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கள் கிடைக்கவும் வாழ்த்துக்களை அட்வான்ஸாக தெரிவித்துக் கொள்வோம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …