என்னது… விஷால் வீட்டை அடித்து நொறுக்கி விட்டாங்களா? என்ன ஆனது…!

 சின்னவயசு என்றாலும் சரத்குமார் மற்றும் ராதாரவியின் கூட்டணியை முறியடித்து நடிகர் சங்கத்தை  கைப்பற்றிய பெருமை விஷாலை சாரும். இவருக்கு ஆதரவாக இளம் கலைஞர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் தான் இந்த வெற்றி கிடைத்தது.

 திரைத்துறையில் ஆரம்பத்தில் நட்போடு பழகிய நண்பர்கள் அனைவரும் சங்க தேர்தல் வெற்றி பின் ஒருவருக்குள் ஒருவர் மோதிக் கொண்டார்கள் .ஆனால் இது வெளியில் யாருக்கும் தெரியாது. இதையடுத்து அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளிவரும். அதை அப்படியே உள்ளுக்குள் வைத்து மூடி விடுவார்கள்.

 இந்த சூழ்நிலையில் சொந்தமாக படத்தை விஷால் தயாரிக்க ஆரம்பித்தார். இந்த பட தயாரிப்பு  விவகாரங்களில் விஷாலுக்கும், லைக்கா நிறுவனத்துக்கும் கொடுக்கல்-வாங்கலில் பல சிக்கல்கள் இருந்துள்ளது. மேலும் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவர் பணத்தை கையாடல் செய்துள்ளதாக புகாரினை போலீசிலும் அளித்திருக்கிறார்கள்.

அடுத்து அந்த வழக்கு எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியாத சூழ்நிலையில் நடிகர் விஷால் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளது.அது அவர் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர் இஷ்டத்துக்கு அவர் எதையும் செய்வது. சங்கத் தேர்தலின்போதும் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்துகிறார்கள்.மேலும் பல தயாரிப்பாளர்கள் இவருக்கு பணம் கொடுத்துவிட்டு தற்போது  தலையில் துண்டைப் போட்டு செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.

 இந்த நிலையில்  சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் நேற்று இரவு காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். இந்த கல்வீச்சில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி விட்டதாக விஷாலின்  மேனேஜர் ஹரிகிருஷ்ணன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.இந்த புகாரினை பதிவு செய்து கொண்ட  போலீசார்  பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏதேனும் புடேஜ் கிடைக்குமா என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். ஏன் மர்ம காரில் வந்தவர்கள் இவர் வீட்டில் கல் வீசினார்கள். எதற்காக இந்த சம்பவம்   நிகழ்த்தப்பட்டுள்ளது. விஷாலுக்கு எதிரிகள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறதாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …