தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனியின் லீலைகள்.. ஆடிபோக வைத்த விஷால்...

தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனியின் லீலைகள்.. ஆடிபோக வைத்த விஷால்…

மலையாள சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்த விஷயங்கள் வெளிவரத் துவங்கியதில் இருந்து தமிழ் சினிமாவிலும் அப்படியான விஷயங்கள் இருக்கிறதா என்கிற கேள்வி தற்சமயம் மக்கள் மத்தியில் எழ துவங்கி இருக்கிறது. முக்கியமாக சினிமா என்றாலே பொதுவாக இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்தாகவும் இருந்து வந்தது.

அதற்கு தகுந்தார் போலவே மலையாள சினிமாவில் இந்த பிரச்சனைகள் தலை விரித்தாடி இருப்பது தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவிலேயே பெரிதாக நடிகைகள் கவர்ச்சியாக நடிக்காத சினிமா மலையாள சினிமாதான்.

மலையாள சினிமா பிரச்சனைகள்

அப்படி இருக்கும் மலையாள சினிமாவிலேயே இவ்வளவு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளது என்றால் அதிகமாக கவர்ச்சி காட்டும் தெலுங்கு சினிமா மற்றும் தமிழ் சினிமாக்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனியின் லீலைகள்.. ஆடிபோக வைத்த விஷால்...

இந்த நிலையில் இந்த பாலியல் பிரச்சனையில் நிறைய பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல எல்லா சினிமாவிலும் ஒரு கமிட்டி அமைத்து அதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விஷயங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே இப்பொழுது மக்களின் குரலாக இருக்கிறது.

உப்புமா கம்பெனி லீலைகள்

சில திரை பிரபலங்களும் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பதவிகளில் இருக்கும் விஷாலிடம் தற்சமயம் இது குறித்து பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன.

இன்று பத்திரிகையாளர் பெட்டியில் பேசிய விஷாலிடம் தமிழ் சினிமாவில் இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஷால் ஆமாம் இங்கேயும் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனியின் லீலைகள்.. ஆடிபோக வைத்த விஷால்...

ஆடிப்போக வைத்த விஷால்

படமே எடுக்க தெரியாத சில உப்புமா நிறுவனங்கள் நிறைய இங்கு இருக்கின்றன. அவை நடிகைகளை வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அழைக்கின்றனர். அழைத்த பிறகு அவர்களை அனுபவித்து விட்டு அவர்களுக்கு வாய்ப்புகளும் தராமல் ஏமாற்றி விடுகிறார்கள் என்று கூறினார்.

இதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே என்று பத்திரிகையாளர்கள் விஷாலிடம் கேட்ட பொழுது நாங்கள் என்ன போலீசா நாங்களாக சென்று நடவடிக்கை எடுப்பதற்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு வேலை எங்களிடம் வந்து கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறார் விஷால்.

இந்த நிலையில் இவ்வளவு வெளிப்படையாக தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் நடக்கிறதா என்று பலரும் இது குறித்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.