தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்ளும் மூன்றெழுத்து நடிகர்..!

 திரைத்துறைக்கு வந்த சில நாட்களிலேயே தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டு மிகவும் சுறுசுறுப்போடு செயல்பட்ட இந்த மூன்று எழுத்து நடிகர் விஷால், தற்போது தனது இமேஜை டேமேஜ் ஆகி கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்.

இப்படியே சென்றால் இனி எழுந்திருக்கவே முடியாது என்று கூறும் அளவுக்கு தற்போது இவரது நிலைமை மோசமாக உள்ளதாம்.

முதலில் நடிகனாக அவதாரம் எடுத்த இவர் உடனடியாக தயாரிப்பாளராக வேண்டும் என்று எண்ணியதோடு இல்லாமல் தயாரிப்பாளர் ஆகி சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இவரின் சுறுசுறுப்பையும் வேகமான செயல்படும் திறனையும் பார்த்த மூத்த நடிகர்கள் எல்லோரும் இவர் நிச்சயமாக எதையாவது சாதிப்பார் என்று மனக்கணக்கு போடுவதற்கு முன்பே இவர் உடனடியாக அரசியலில் குதித்தார்.

துடிப்புள்ள இளைஞன் ஆன இவருக்கு  ஓட்டு போட்டா இவர் தரக்கூடிய வாக்குறுதிகளை கட்டாயம் எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இவரை நம்பி ஓட்டுப் போட்டவர்கள் தற்போது தலையில் துண்டைப் போட்டுக் கொண்ட நிலையில் இவர் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

அதுமட்டுமில்லாமல் கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படம் எதுவும் திரைக்கு வெளிவரவில்லை. இதன் காரணத்தினால் அவர் படப்பிடிப்புக்கு வராததற்கு காரணம் என்ன என்று கேட்டாலும் எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு பதில் சொல்லி மழுப்பி விடுகிறாராம். இதை அடுத்து இவர் மீது புகார் கொடுக்க சென்றாலும் அங்கும் எந்த பருப்பும் வேகவில்லை. இவர் சுற்றி இருக்கின்ற நட்பு வட்டாரங்கள் இவரை இன்று வரை காப்பாற்றி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் நிலைமை இப்படியே தொடர்ந்து வந்தால் எல்லாமே அடிபட்டுப் போகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறார்கள். எனவே உடனே சுதாரித்து இந்த மூன்று எழுத்து நடிகர் செயல்பட்டார் என்றால் மீண்டும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால் இவர் பாடு திண்டாட்டம்தான். இவர் இருந்த சுவடே தெரியாமல் திரையுலகில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தை இவரே தனக்கு ஏற்படுத்திக் கொண்டார்.அதாவது யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல எந்த நடிகரின் செயல் உள்ளது. எப்போதுதான் இவர் திருந்துவார் என்று பலரும் முனு முனுத்து கொள்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …