வாழ்கையில் ஒரு முறையாச்சும்.. இதை பண்ணுங்க..! – நடிகர் சரத்குமார் வேண்டுகோள்..!

காதல் சின்னம் தாஜ்மஹால் என்ன? அதைவிட பல நூற்றாண்டுகளாக தமிழர்  பெயரை சொல்லும் அளவுக்கு தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க ஒவ்வொரு தமிழனும் வரவேண்டும் என்று நடிகர் சரத்குமார் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில்  பெரிய பழுவேட்டரையர்  கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பது தனக்கு மிகுந்த பெருமையாக இருப்பதாகவும் இந்த கதாபாத்திரம் தன் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியிருக்கிறார்.

 மேலும் இந்த கேரக்டர் ஆனது மிகவும் முக்கியமான கேரக்டர். இந்த நாவலில் இந்த கேரக்டர் மையமாக கொண்டு தான் இந்த நாவலை உருவானது என்று சொல்லும் அளவுக்கு வெயிட்டான கேரக்டர் என்று கூறினார்.

மேலும் அவர் பெரிய பழுவேட்டரையாரும் ஒரு பெண்ணிடம்  வீழ்ந்ததை மெய்னாக கொண்டு இந்த நாவலை உருவாகி இருக்கிறது. அந்த கேரக்டரை தான் செய்திருப்பதாக கூறினார்.

 இவர் மன்னர் அல்ல ஆனால் மன்னருக்கு இணையானவர். குடிமக்களைப் பேணிப் பாதுகாப்பதில் இவரது பணி அளப்பரியது. 64 விழுப்புண்கள் பெற்ற மாவீரர்  அப்படிப்பட்ட தமிழ்  வீரனின் கேரக்டர் எனக்கு தந்த மணிரத்னத்திற்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்று கூறினார்.

---- Advertisement ----

தமிழர்களின் பெருமை தெரியாதவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்து விட்டால் தான் ஒரு தமிழனாக இல்லை என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்படும் வண்ணம் இந்த படமானது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள்.

இவர்களது நடிப்பு இந்தக் காவியம் நாளை தமிழர்களின் சிறப்பை உலகிற்கு எடுத்து உரைக்கக் கூடிய அளவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வளவு சிக்கல்களையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் நடித்திருக்கிறார்கள்.

 தான் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாகவும் சிலவற்றில் கதாநாயகனாகவும் சிலவற்றில் ஆன்டி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.சினிமா இவரது தொழில் அதுவே வேலை என்பதில் தீவிரமாக பணி செய்து வருகிறேன் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

---- Advertisement ----