“கல்யாணம் ஆன 3-வது நாளே.. பண்ணை வீட்டில் வைத்து…” – நடிகை விசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் கனவு ராணியாக இருந்தவர் நடிகை விசித்ரா. தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்து இருப்பார்கள். அந்த பட்டியலில் விசித்திராவும் ஒருவர்.

பிரபல தயாரிப்பாளரின் மகளான இவர் தனது சினிமா தொடர்புகள் மூலமாக சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார். கடைசிவரை கவர்ச்சி நடிகையாகவே இவரை பயன்படுத்தினார்கள் இயக்குனர்கள்.

இவருடைய நடிப்பு திறமையை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான கதாபாத்திரங்களும் இவருக்குக் கிடைக்கவில்லை. இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது இவருடைய இடுப்பு மடிப்பு தான்.

எனவே இவரை பலரும் மடிப்பு அம்சா என்றுதான் வர்ணித்தனர். இளம் வயதில் வாட்டசாட்டமான தோற்றம் பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவட்டு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தலைவாசல் என்ற திரைப்படத்தில் மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இதன்மூலம் ரசிகர்களால் பேசப்பட்டார். அன்று முதல் இவரை இவரை பலரும் மடிப்பு அம்சா என்றே அழைக்கின்றனர்.

இவருடைய உண்மையான பெயரை தாண்டி இவருடைய பட்டப்பெயரான மடிப்பு அம்சா என்பது இவரை இன்னும் பிரபலமாக்கியது. சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். கே கே நகரில் இருக்கக்கூடிய ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.

நான் உச்சகட்டத்தில் இருந்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டேன். காதலுக்கு கண் தெரியாது என்பார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு என் கணவருடைய உறவினர்கள் நான் நடிகை என்பதால் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர்.

இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. இதனால் திருமணமான மூன்று நாட்களில் என்னுடைய உறவில் பிரச்சினை வந்தது. அதன் பிறகு நான் சினிமாவை விட்டு விலகி கணவர் குழந்தைகள் என என்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன்.

என்னுடைய வாழ்க்கை தான் எனது முக்கியமாக தெரிந்து, தவிர சினிமா அல்ல. சினிமா நான் செய்த தொழில் அந்த தொழில் என்னுடைய குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன்.

எனக்கு திருமணமாகி மூன்று நாட்கள் ஆகியிருக்கும் அப்போதுதான் என்னுடைய தந்தையை எங்களுடைய பண்ணை வீட்டில் சில மர்ம நபர்கள் புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து பணம் நகை ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளனர்.

இந்த செய்தியை நான் அடுத்த நாள் தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால் அப்போது என்னிடம் நிரந்தரமான தொலைபேசி எண் என்று எதுவும் கிடையாது.

என்னுடைய தொலைபேசி என்னை யாருக்கும் கொடுக்கவில்லை. எனது உறவினர்களுக்கு கூட என்னுடைய தொலைபேசி எண்ணை நான் கொடுக்கவில்லை. தனியாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று சென்றேன். ஆனால், மூன்றே நாட்களில் என்னுடைய தந்தையை இழந்தேன்.

அதனை அடுத்த நாள் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டபோது மிகப் பெரிய அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அந்த நாள் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை விசித்திரா. மேலும், இது போன்ற நிலை என்னுடைய எதிரிக்கு கூட வரக்கூடாது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை …