நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?

நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?

சினிமாவில் சில காட்சிகளில் நடித்தாலும், சில படங்களில் நடித்தாலும் சில நடிகர்கள் நடிப்பில் தனிமுத்திரை பதித்து விடுகின்றனர். குறிப்பாக துணை கதாபாத்திரங்களில், காமெடி கேரக்டர்களில் நடிப்பவர்கள், மிக எளிதாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர்.

விஸ்வேஸ்வர ராவ்

காமெடி ரோல்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து அப்படி பிரபலமான ஒரு நடிகர்தான் விஸ்வேஸ்வர ராவ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் சிறந்த நடிகர். சில காட்சிகள் என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திறமைசாலி நடிகர்.

லைலா அப்பா

பிதாமகன் படத்தில் லைலா அப்பாவாக நடித்திருப்பார். லைலா, எங்க தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்காம விட மாட்டா எனறு ஆவேசமாக பேசும் தன் மகளை பார்த்து, உன்னை மகளா பெத்துக்கவா, திருப்பதியில மேலயும் கீழயும் இறங்கி ஏறினோம் என்று புலம்புவார்.

இதையும் படியுங்கள்: அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!

ஈ படத்தில்…

உன்னைத்தேடி படத்தில், பரிசு விழ வேண்டிய லாட்டரி சீட்டை மாற்றிக் கொடுத்து வேறு சீட்டை வாங்க வைத்த டுபாக்கூர் ஜோசியர் சார்லியை அரிவாளுடன் தேடும் காட்சியில் நடித்திருப்பார். ஈ படத்தில் நகை அடகுக்கடை சேட்டுவாக நடித்திருப்பார்.

இப்படி சில படங்களில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த விஸ்வேஸ்வர ராவ் மறைவு என்பது, தமிழ் சினிமா துறையினரை, ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளியுள்ளது.

தொடரும் திரை பிரபலங்களின் மறைவு

இரு தினங்களுக்கு முன்புதான் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அதற்கு சில தினங்களுக்கு முன் நடிகர் சேஷூ மறைந்தார்.

நடிகர் விஜயகாந்த், போண்டாமணி என தொடர்ந்து தமிழ் சினிமா சார்ந்த பிரபல்களின் மறைவு என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை, வேதனையை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக 150 படங்களில்..

விஸ்வேஸ்வர ராவ் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் அவர் 6 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். தெலுங்கில் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக 150 படங்களுக்கு மேல் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளியின் அரவணைப்பில் தீப நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த ட்விஸ்ட்..

டிவி சீரியல்களில்…

சினிமாவில் மட்டுமின்றி, நிறைய சீரியல்களிலும் விஸ்வேஸ்வர ராவ் நடித்திருக்கிறார். டிவி சேனல்களில் நடித்தது மட்டுமின்றி சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவருக்கு தற்போது 62 வயதாகிறது.

ரசிகர்கள் வருத்தம்

சமீபமாக அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இறந்ததாக தெரிய வந்துள்ளது. சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை தகனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.