பலாப்பழத்தின் நன்மைகள்.

பலாப்பழத்தின் வெளித்தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும் அதன் உட்பகுதியில் கண்ணைப் பறிக்கும் வகையில் தித்திக்கும் பழங்கள் உள்ளது. இந்த பழம் கோடையில் அதிக அளவு கிடைக்கும். இப் பழத்தின் காயை சமைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியுடன் சுவையாகவும் இருக்கும்.

பலாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், மக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பலாப்பழம்

வைட்டமின் சி அதிகம் உள்ளது இவை உடலை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு தரும். குறிப்பாக வைட்டமின் சி வெள்ளை அணுக்களை வலுவுள்ளதாக மாற்றும். எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

 இப்பழத்தில் வைட்டமின் சி  புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்,  லிக்னைன்கள், ஐசோ ஃப்ளேவோனாய்டுகள்  மற்றும் சபோனின் கள் அதிகளவு காணப்படுகிறது. இவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செயல்களால் ஏற்படக்கூடிய கொடிய புற்று நோயை தடுக்கிறது.

 பலாப்பழத்தில் உள்ள ஆன்ட்டி அல்சர் பொருள் அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். 

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை சரிசெய்யும். 

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சக்தி வாய்ந்த சத்து கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது குறிப்பாக பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

இதில் இனிப்பை தரக்கூடிய பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உடலுக்கு தேவையான எனர்ஜியை அதிகரித்து தரும். மேலும் இதில் கொழுப்பு எதுவும் இல்லாததால் ஆரோக்கியமான பழம் என கூறலாம். 

இப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து மாரடைப்பு வருவதை தடுக்கிறது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலாப்பழம் ஒரு நல்ல நிவாரணியாகும். 

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் ஆஸ்துமாவானது கட்டுப்படும்.

 கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான மெக்னீசியம் பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளதால் எலும்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் எலும்பை வலுவோடு வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உள்ளது.

 இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் சீரான ரத்த ஓட்டத்தை தருவதோடு ரத்த சோகை பிரச்சனையை தீர்க்கிறது.

 தைராய்டு சுரப்பி சீராக இயக்குவதற்கு காப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது எனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழத்தை உண்பதன் மூலம் தைராய்டை சீராக வைத்து கொள்ளலாம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …