பெண்கள் என்றாலே ஏன் அந்த உறுப்பை மட்டும் பாக்குறீங்க.. தொகுப்பாளினி அர்ச்சனா நறுக்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக பார்க்கப்பட்ட வருபவர் தான் விஜே அர்ச்சனா. இவர் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளியாக பார்க்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கினார் அர்ச்சனா .

அதன்பிறகு 2000 காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் தமிழக மக்களுக்கு ஃபேமஸ் ஆகிவிட்டார் என்று சொல்லலாம்.

தொகுப்பாளினி அர்ச்சனா:

தொடர்ச்சியாக அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக சுமார் 7 ஆண்டுகள் காமெடி டைம் மற்றும் இளமை புதுமை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக மனதில் இடம் பிடித்தார்.

---- Advertisement ----

அந்த அளவுக்கு அழகும் ஸ்டைலும் மாடர்ன் பெண்ணாக அப்போதைய விஜேவாக அர்ச்சனா தான் பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே திருமணம் குழந்தைகள் என சில வருடங்கள் மீடியா பக்கமே திரும்பாமல் இருந்த பிஜே அர்ச்சனா மீண்டும் 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக விஜய் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கினார் .

25 ஆண்டு கால பயணம்:

அதன் மூலம் சின்னத்திரை சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இப்படியாக கடந்த 25 ஆண்டுகளாக அவரது தொகுப்பாளினி பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மிகவும் போல்டாக தைரியமான தனது கருத்துக்களை பேசுவது பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுப்பது உள்ளிட்டவற்றில் பேமஸான தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அர்ச்சனா சரிகமப சீசன் 3 வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவரது மகள் சாராவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜே அர்ச்சனா பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஒரு பெண் வருகிறார் என்றால் அந்த பெண் மீது கை வைக்க ஆண்கள் ஆசைப்படுகிறார்கள்.

பெண்களின் அந்த உறுப்பை பார்க்கிறார்கள்:

நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது ஸ்லீவ் லெஸ் போடுவேன். அது எனக்கு நன்றாக இருக்கும். ஆனால், அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்கும் போது தான் ஸ்லீவ்லெஸ். டி-ஷர்ட் போடுவது நான் நிறுத்திவிட்டேன்.

எந்த இடத்திலும் பெண்களை பற்றி பேசக்கூடிய கெட்ட வார்த்தை. அவர்களது கால்களுக்கு நடுவே இருக்கும் உறுப்பை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறார்கள்.

ஆண்கள் கூட்டம் எப்போதும் ஒரு பெண்ணை அங்கிருந்து மட்டுமே பார்க்கிறீர்கள் ஏன்?எல்லாருமே அந்த இடத்தில் இருந்துதான் வெளி உலகத்திற்கு வருகிறோம்.

ஆனால் அந்த இடத்தை அசிங்கமாக பேசுகிறார்கள் என்பது எனக்கு மிகவும் கேவலமாகவும் மனவருத்தத்தையும் கொடுக்கிறது என அர்ச்சனா தெரிவித்திருக்கிறார்.

---- Advertisement ----