ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.

ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் முக்கியமானவர் வி.ஜே அர்ச்சனா. வி.ஜே அர்ச்சனாவை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று மூன்று சேனல்களிலுமே பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார்.  1999 இல் இருந்து இவர் தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதன்முதலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கினார் அர்ச்சனா. அதற்குப் பிறகு அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

வி.ஜே அர்ச்சனா

அதனை தொடர்ந்து சன் டிவியில் பிரபலமாகி வந்த அர்ச்சனா அதற்குப் பிறகு ஸ்டார் விஜய்யில் 2008 ஆம் ஆண்டு சேர்ந்தார். நம்ம வீட்டு கல்யாணம் என்கிற நிகழ்ச்சியை அங்கு தொகுத்து வழங்கினார். தொடர்ந்து அவர் ஜீ தமிழ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பை பெற்றார்.

ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.

இதனை தொடர்ந்து டாக்டர், நான் சிரித்தால் மாதிரியான சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். சொந்த வாழ்க்கையை பொருத்தவரை இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இவருக்கு நன்றாகதான் சென்று கொண்டிருந்தது.

ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்

ஆனால் சில காலங்களில் அவர்களுக்கு நடுவே ஒரு பிரிவு ஏற்பட்டது என்று ஒரு பேட்டியில் கூறுகிறார் அர்ச்சனா. அந்த சமயத்தில் தனது மகள் செய்த விஷயம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதில் எனது மகளுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை.

சொல்ல போனால் அந்த விஷயத்தை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். எனவே எங்களுக்கு ஒரு ரூல்ஸை எனது மகள் போட்டார். அதாவது நானும் எனது கணவரும் ஒரு வாரத்திற்கு பேசிக் கொள்ளவே கூடாது. போனில் கூட பேசிக் கொள்ளக் கூடாது.

ரெண்டு பேரும் பிரிஞ்சரலாம்னு நினைச்சோம்.. என் பொண்ணுதான் காரணம்.. உண்மையை கூறிய வி.ஜே அர்ச்சனா!.

பொண்ணுதான் காரணம்

இருவரும் தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறினார் நாங்களும் அவர் சொல்வது போல கேட்டோம். ஆனால் எனது மகள் சொன்னது போலவே ஒரு வாரம் கூட எங்களால் பிரிந்து இருக்க முடியவில்லை.

நான் தொடர்ந்து எனது மகளிடம் உனது அப்பா மாத்திரை சாப்பிட்டாரா என்றெல்லாம் கேட்பேன். அப்பொழுதே எனது மகள் அதெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது என்று கூறி வந்தார். நாங்கள் இருவரும் பேசாமல் இருந்த 48 மணி நேரத்திலேயே எங்களால் பிரிந்து வாழ முடியாது என்பது எங்களுக்கு புரிந்து விட்டது.

அதற்கு பிறகுதான் எதற்காக இருவரும் விவாகரத்து பெற வேண்டும் என்று நினைக்கிறோம் என்று எங்களது பிரச்சனைகளை பார்க்க துவங்கினோம். இருவருமே எங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. அதன் பிறகு சேர்ந்து வாழ துவங்கிய நாங்கள் இப்பொழுது வரை பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்று கூறுகிறார் அர்ச்சனா.