இது தான் நான்.. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியின் ராசியான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜே டிடி இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனார்.

இதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை செய்து வந்தார்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு வந்து இங்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக மிகப் பிரபலம் ஆனார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷனி:

அதுமட்டுமில்லாமல் இவர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் Vs கேர்ள்ஸ் ,ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயரும் புகழை கொடுத்தது என்னவோ காபி வித் டிடி நிகழ்ச்சி தான்.

---- Advertisement ----

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் நட்சத்திர நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திரைப்பட வாழ்க்கை பற்றியும், காதல் சுவாரஸ்யம், குடும்ப வாழ்க்கை இப்படி பல விஷயங்களை வீடியோவுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

இதனால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பேமஸானது .குறிப்பாக பிரபலங்களிடம் சர்ச்சைக்குரிய கேள்விகளையும் மிகவும் லாவுகரமாக அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் வகையில் கேள்வி கேட்டு பதிலை வாங்கி விடுவார்.

இதுதான் திவ்யதர்ஷினி தனி நேக்கு என்றே சொல்லலாம். இதனால் பிரபலங்களும் திவ்யதர்ஷினி உடன் நேர்காணல் என்றால் விருப்பப்பட்டு வந்து கலந்து கொள்வார்கள்.

மக்கள் மனம் கவர்ந்த தொகுப்பாளினி:

கலகலப்பான பேச்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளியாக திவ்யதர்ஷினி இருந்து வருகிறார்.

ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றம் அழகு கவர்ச்சி என அத்தனையும் கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தவர் திவ்யதர்ஷினி.

டிடி நீலகண்டன் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு திவ்யதர்ஷினி என்ற பெயர் மாற்றிக்கொண்டார். இவர் நீலகண்டன் – ஸ்ரீ லதா என்பவருக்கு 1985 ஆம் ஆண்டு இளைய மகளாக பிறந்தார்.

இவருக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவர் பிரியதர்ஷினி அவரும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து நடித்த மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 39 வயதாகும் திவ்யதர்ஷினி சிங்கிள் வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறாராம்.

2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் வெகுசில வருடத்திலேயே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

நேச்சுரல் அழகை காட்டும் டிடி.

விவாகரத்துக்கு பின்னரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிஸியாக இருந்து வரும் தொகுப்பாளினி இதனிடையே அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் தனது க்யூட்டான புகைப்படங்கள் அவுட்டிங் புகைப்படங்கள் ட்ரிப் அடிக்கும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் .

அந்த வகையில் தற்போது வித்தவுட் மேக்கப்பில் துளி கூட மேக்கப் போடாமல் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதுதான் நான் எனக்கூறியுள்ளார்.

அதில், லென்ஸ் போடல,லிப்ஸ்டிக் போடவில்ல, ஹேர் ஸ்டைல் பண்ணல, நோ மேக்கப் , நோ ஜிவெல் என தனது நேச்சுரல் அழகை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

---- Advertisement ----