நூறு நாட்கள் கடந்து விட்டதாம்…. புதிய போட்டோவை போட்டு அதிர்ச்சியை கிளப்பி இருக்கும் வி.ஜே மகாலட்சுமி ரவீந்திர ஜோடி…!!

 காதலுக்கு கண் இல்லை என்று கூறுவது ஒரு வகையில் உண்மைதான். பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி அழகாக இருந்தால் மட்டுமே அவர் மீது கதாநாயகனுக்கு காதல் வரும் என்று கூறி இருப்பார்கள்.

அப்படி அழகைப் பார்த்து வருவது காதலல்ல குணத்தை பார்த்து வருவது தான் காதல் என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார்கள் வி.ஜே  மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர்.

 பல ஆண்டுகளாக காதலித்தும் அந்த காதல் பற்றி எதுவுமே வெளியில் கசியாத வண்ணம் பார்த்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு ரவீந்தரரை கரம் பிடித்தார் வி.ஜே மகாலட்சுமி.

 ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்ற  நிலையில் இது போன்ற முடிவை எடுப்பது என்பது மிகக் கடினம் தான். அந்த சூழ்நிலையை வெகுவாக அழகான முறையில் கையாண்டு தற்போது பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்கள் இந்த ஜோடிகள்.

 திருமணம் முடிந்த பிறகும் இவர்கள் ட்ரெண்டிங் ஜோடி லிஸ்டில் இன்றுவரை இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பல உண்டு.

 ஆரம்ப கட்டத்தில் இவர் பணத்திற்காகத்தான் தயாரிப்பாளரான இவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று பேசி வந்த நிலையில் குணத்துக்காக தான் திருமணம் நடந்தது என்பதை பல நிகழ்வுகளில் இவர்கள் தாமாகவே வெளிப்படுத்திய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதில் உருவ கேலியும் செய்யப்பட்ட போதும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தக்க பதிலடியை தரமாக தந்த இந்த ஜோடிகள் திருமணம் முடிந்து 100 நாட்களை கடந்து விட்டார்களாம்.

 இதனை அடுத்து இதைக் கொண்டாட அவர்கள் வெளியே சென்றிருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு தனது அழகிய 100 நாட்கள் என்பதை மனதில் பதிவு செய்த படி இவர்கள் இன்ஸ்டால் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

 இதைப் பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் உறவுகள் இவரது ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …