பிரபல தொகுப்பாளினி VJ மகாலட்சுமி அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயானார். இந்நிலையில், சக சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவருடன் நெருக்கமாக இருந்தார் அம்மணி.
இடையில், 2019-ம் ஆண்டு தன்னுடைய கணவர் அனில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறி அவரை விவாகரத்தும் செய்து விட்டார். அதன் பிறகு, சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார் VJ மகாலட்சுமி.
சீரியல் நடிகர் ஈஸ்வர் ஏற்கனவே ஜெயஸ்ரீ என சீரியல் நடிகையை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தவர். அது தெரிந்தும், ஈஸ்வருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் VJ மகாலட்சுமி. அவருக்கு சட்டை வாங்கி கொடுப்பது. அடிக்கடி அவுட்டிங் செல்வது என ஈஸ்வரை தன்னுடைய வலையில் வீழ்த்த முயற்சி செய்துள்ளார்.
இதனை மீடியா முன்பு புட்டு புட்டு வைத்தார் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. இப்படி சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்ட VJ மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெரும் விவாத பொருளானது.
இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ரவீந்தர். இந்நிலையில், பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் VJ மகாலட்சுமி குறித்து வீடியோ ஒன்றில் விளாசியுள்ளார்.
எப்போதுமே, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசக்கூடிய பயில்வான் ரங்கநாதன் கூறியாதவது, அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு VJ மகாலட்சுமி ஒரு எடுத்துக்காட்டு.
கணவனை விவாகரத்து செய்து விட்டு, வேறொரு சீரியல் நடிகையின் கணவரை கவர நினைத்தவர் VJ மகாலட்சுமி. கடைசியாக, ரவீந்தரை பணத்தாசை காரணமாக திருமணம் செய்து கொண்டார்.
ரவீந்தர் போல பெரிய உருவம் கொண்ட ஒருவரை, அதுவும் அழகாக இருக்கக்கூடிய மகாலட்சுமி போன்ற ஒரு பெண் கணவனாக தேர்வு செய்யவே மாட்டார். ஆனாலும் மகாலட்சுமி அதனை செய்தார் என்றால் வெறும் பணத்தாசை தான் காரணம்.
இப்போது, பண மோசடி வழக்கில் ரவீந்தர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டால் நிலைமை இது தான் என VJ மகாலட்சுமியை விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.