கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியின் தொகுப்பாளனியாக வளம் வந்தவர் VJ மணிமேகலை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருக்கும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலுமான உசேன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் சிறிது காலம் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மீண்டும் என்ட்ரி ஆகி இருக்கிறார்.
அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் இணையத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி சின்னத்திரை மற்றும் இணைய பக்கங்கள் வாயிலாக வருமானம் பார்த்து தன்னுடைய வாழ்வை நடத்தி வரும் மணிமேகலை விலை உயர்ந்த சொகுசு கார்களையும் வாங்கி இருக்கிறார்.
அதனுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் கூட தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் தன்னுடைய யூடியூப் சேனலில் கேளிக்கையான வீடியோக்கள் மற்றும் சமையல் வீடியோக்கள் அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து வரும் இவர் ஒரு முறை சமையல் வீடியோ செய்து கொண்டிருக்கும் பொழுது இவர் சமைத்துக் கொண்டிருந்த குக்கர் வெடித்தது.
இந்த வீடியோ பயங்கர வைரலானது. கொரோனா லாக்டவுனில் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற இவர் அங்கே இருந்த தன்னுடைய சுற்றம் மற்றும் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து தன்னுடைய இணைய பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.
அதன் பிறகு எல்லா பண்டிகைகளுக்கும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் வீடியோவை வெளியிட்டு வருகிறார் அம்மணி. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இனிய பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் விஜே மணிமேகலையின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.