பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே பார்வதி ( Vj Parvathy ). இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி ஒருமுறை இவரை ஆண்ட்டி என்று கூறியதிலிருந்து வைரலாக தொடங்கினார்.
அதன் பிறகு அதே யூடியூப் சேனலுக்கு மக்களிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றார். இவருடைய கான்செப்ட் பெரும்பாலும் 18 பிளஸ் தொடர்புடையதாகவே இருந்தது.
இதனால் எப்போதுமே இவரது வீடியோக்கள் டிரெண்டிங்கில் இருந்து வந்தன. அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால் மற்றவர்களுக்கு கிடைத்த வரவேற்பை போல இவருக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி விட்டாராம்.
வருகின்ற வாய்ப்புகளை விடாமல் தக்கவைக்க தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு வலம்வரும் தொகுப்பாளினிகள் கொஞ்சம் கிளாமர் காட்டினாலே அவர்களது புகைப்படங்கள் பல்லாயிரம் லைக்குகளை குவித்து வருகிறது.
இந்நிலையில், ட்ரையல் ரூமில் ஜிம் உடையை அணிந்து கொண்டு செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ட்ரெயின் டாய்லெட் மாதிரி இருக்கு.. என்று கலாய்த்து வருகின்றனர்.