“நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த ட்ரெஸ் தானே இது…?..” – VJ பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

நகைச்சுவை உணர்வோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் பிரியங்கா கேடி. தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனலையும் ஆரம்பித்து அதில் ஏகப்பட்ட சுவாரசிய கன்டென்ட்களையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். 

 

கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலக்கபோவது பெற்று வருகிறார். இவரது சிரிப்பு படு பிரபலம். இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தன்னைத் தானே கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து சமாளிப்பது போன்ற விஷயங்களால் பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். 

 

விஜய் டிவி-க்கு வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார்.கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். சின்ன வயதிலிருந்தே டிவி துறை பிடிக்கும் என்பதால், அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறார். 

 

 

ஜீ டிவியில் ஒளிபரப்பான “த சிற்பி கேர்ள்” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரியங்கா தனது கரியரைத் தொடங்கினார். சன் டிவி, சன் மியூசிக், ஆகிய சேனல்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பணிபுரிகிறார். “சூப்பர் சிங்கர் 5” ரியாலிட்டி நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் பிரவீனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

 

 

பொதுவாக ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் விஜே க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை கலாய்ப்பது தான் வழக்கம். ஆனால் நிகழ்ச்சியின் கன்டஸ்டன்ட்களே விஜே வை கலாய்ப்பது என்பது பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மட்டுமே நடைபெறும் ஒரு விஷயமாகும்.

கண்டஸ்டன்டுகள் மட்டுமின்றி நடுவர்கள் கலாய்த்தாலும் அதையே நகைச்சுவையாக மாற்றி நிகழ்ச்சியை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்லும் அளவிற்கு ஒரு பக்குவமான விஜே வாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில், ஸ்கூல் பொண்ணு மாதிரி ஒரு ட்ரெஸ்-ஐ அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன மூணாவது படிக்குற பொண்ணு மாதிரி.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …