சரும பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் முக்கியத்துவம்.

வால்நட் பருப்பில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல் சத்துகள் நிறைந்து உள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே சத்து நிறைந்துள்ளது. இதில் சோடியம், துத்தநாகம்,  நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது.

மேலும் செம்பு, ட்ரிப்டோபான் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் செல்லும் போது மூளை செல்கள் புத்துணர்வு பெற்று நன்கு செயலாற்ற மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

வால்நட் பருப்பில் இருக்கக் கூடிய இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடலை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. 

உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. புரோட்டின் நிறைந்த இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால் அற்புதமான பலன்களை பெற முடியும்.

வால்நட்டில் இலையில் இருந்து பெறப்படும் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும். 

ஏதேனும் ஒரு பகுதியில் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்பட்டால் அந்த தொற்றுகள் உள்ள பகுதியில் எண்ணெயை தடவினால் பூஞ்சை தொற்றுகள் நீங்கி சருமம் பளபளப்பாகும். 

சருமத்தில் ஏற்பட்டிருக்கும் தோல் அலர்ஜியை சரிசெய்ய குளிக்கும் நீரில் வால்நட் எண்ணெயை சிறிதளவு சேர்த்து  பயன்படுத்தினாலே போதும் சரும பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால் அவற்றை சரி செய்ய அந்த இடத்தில் வால்நட் எண்ணெய் தடவினாலே போதும் சிவப்பு நிறம் மறைந்து விடும்.

இந்த எண்ணெயில் அதிகமாக ஒமேகா-3 உள்ளதால் இதய நோய், புற்று நோய், சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது. 

வால்நட்டில் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கவும், வெளியேற்றவும் உதவும்.  

அக்கால மனிதர்கள் முதல் இக்கால மனிதர்கள் வரை வால்நட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இது பெரும்பாலான அரச குடும்பத்தினரால் பெரிதும் பயன்படுத்தப் பட்டது. வால்நட் எண்ணெய் உடலில் ஏற்படும் உபாதைகளை சரிசெய்ய வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோயை குணப்படுத்த பயன்படுகிறது. 

மேலும் இது உடலில் ஏற்படும்  தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது. இது ஒரு நல்ல கிருமி நாசினி. 

அல்சைமர் எனும் நோயை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள எலும்புகளை பலமாக்க தேவையான கால்சியம் சத்தை இந்த வால்நட் தருகிறது.

அதுபோல் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் விந்தணு உற்பத்தி நியூக்ளிக் அமிலம் தொகுப்பு செரிமானம் மற்றும் உடலின் மொத்த வளர்ச்சிக்கு இது உதவியாக உள்ளது.

உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் சீராக கிடைக்கிறது நீரழிவு நோய் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நல்ல தூக்கம் ஏற்படுவதற்கு உதவுகிறது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …