“தூரப்போடும் தர்பூசணி தோலை கொண்டு சுவையான தர்பூசணி தோசை..!” – இப்படி செய்யலாமே..!

கோடையில் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பழங்களை அதிகளவு எடுத்துக் கொள்வோம். அந்த வரிசையில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் தர்பூசணியை விரும்பி சாப்பிடுவோம்.

தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் அடியில் இருக்கும் தோலை தூரப் போடுவோம். இனி அதுபோல செய்ய வேண்டாம். அந்த தோலில் இருக்கக்கூடிய பச்சை நிற பகுதியை நாம் தூர போட்டுவிட்டு வெள்ளையாக இருக்கும் பகுதியைக் கொண்டு தோசை செய்து சாப்பிடலாம். அப்படி அந்த தோசையை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தர்பூசணி தோசை செய்ய தேவையான பொருட்கள்

1.இட்லி அரிசி அரை கிலோ

2.உளுந்து 150 கிராம்

3.உப்பு தேவையான அளவு

---- Advertisement ----

4.வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்

5.தர்பூசணி தோலில் இருக்கும் வெள்ளையான பாகம் 100 கிராம்

செய்முறை

முதலில் தர்பூசணியின் அடிபாகத்தில் இருக்கக்கூடிய பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு வெள்ளையாக இருக்கக்கூடிய பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்றாக கழுவி எடுத்து ஒரு பௌலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து எப்போதும் போல தோசைக்கு அரைக்க கூடிய இட்லி அரிசி மற்றும் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து அதோடு வெந்தயத்தையும் சேர்த்து நீங்கள் கிரைண்டரில் போட்டு அரைக்கும் போது  வெட்டி சுத்தப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை சேர்த்து அரைத்து விடுங்கள்.

அரைத்த இந்த மாவோடு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொண்டு 3 மணி நேரம் கழித்து நீங்கள் தோசை சுட்டு எடுக்கலாம்.

மிகுந்த சுவையோடும் மொறுமொறுப்பாக இந்த தோசை இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

எனவே நீங்களும் தர்பூசணி தோலை வேண்டாம் என்று வெளியே தூர போடாமல் இது போல தோசை அரைத்து பாருங்கள். மீண்டும் மீண்டும் இந்த தோசை வேண்டும் என்று உங்கள் வீட்டு நபர்கள் கேட்பார்கள்.

---- Advertisement ----