திருமணம் முடிந்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நட்சத்திர தம்பதிகள்- ஜோ மற்றும் சூர்யா!

பல நாட்கள் காதலித்து தனது தந்தையை ஒப்புதல் கிடைத்த பின்னரே ஜோதிகாவை கைப்பிடித்தார் நடிகர் சூர்யா. இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் இடையே காதல் மலர்ந்துள்ளது.

 திரைப்படத்தில் வரக்கூடிய வில்லனைப் போலவே நடிகர் சிவக்குமாரும் ஆரம்பகட்டத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னர் பச்சைக் கொடி காட்டினார்.  இந்த தம்பதிகளுக்கு 16 ஆண்டுகள் திருமணமாகி நிறைவடைந்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும், தேவ் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள்.

தனதுமனைவியான ஜோதிகாவின் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்திருப்பதோடு பெண் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் பிள்ளைகளின் படிப்பை உயர்த்துவதற்காக அகரம் பவுண்டேசன் என்பதை உருவாக்கி கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே.

இவர்கள் பதினேழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த தம்பதிகள் தங்களது திருமண விழாவை சீரும் சிறப்புமாக தங்களது வீட்டில்  கொண்டாட இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே இவர்களுக்கு  வாழ்க்கையை தெரிவித்திருக்கிறார்கள்.

 இவரது தந்தை சிவக்குமாரும் நீண்டநாள் இவர்கள் இதேபோல் தொடர்ந்து இணைந்து இன்பமோடு வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவர்கள் திருமண தேதியை அறிந்துள்ள ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

பல வெற்றி படங்களை கொடுத்த சூர்யா தற்போது சூரரை போற்று படத்தில் விருது பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த படத்திற்கு பின்னால் அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். இவர் தற்போது சூர்யா நாற்பத்தி ஆறு என்ற படத்தில் மிகப் பிரம்மாண்டமான படத்தில்  நடிக்க இருப்பதாக தகவல்கள் உள்ளது.

இந்த தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வளமுடன் வாழ இறைவனை நாம் வேண்டிக் கொள்ளலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …