இதனால் தான் ரகுவரன்-ஐ விவாகரத்து செய்தேன்..! ரசிகர்களை அதிர வைத்த நடிகை ரோகிணி..!

தமிழ் சினிமாவில், முக்கிய நடிகைகளில் ஒருவர் ரோகிணி (Rohini) தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ஜோதிகா, தபு, ஐஸ்வர்யா ராய், ரஞ்சிதா போன்ற பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். ரோகிணி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணம், அனகாபள்ளியை சேர்ந்தவர். 50 வயதுகளை கடந்தவர். இவர் சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு, தமிழ் சினிமாவில் சில நெருங்கிய தோழிகள் உண்டு. ஸ்ரீவித்யா, ஸ்ரீப்பிரியா, அம்பிகா, ராதா, ரேவதி, ஸ்ரீதேவி, ரம்யாகிருஷ்ணன் என்ற வரிசையில், ரோகிணியும் முக்கியமானவர். கமல்ஹாசனை போலவே, சமூக சீர்த்திருத்த எண்ணங்களை கொண்டவர் ரோகிணி.

ரோகிணி
Rohini

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில், ரோகிணி நடித்திருக்கிறார். நிழல்கள், தந்துவிட்டேன் என்னை, மறுபடியும், மகளிர் மட்டும், பவுனு பவுனுதான், ஆசை, விருமாண்டி, ஐயா, ஒன்பது ரூபாய் நோட்டு, பெண் சிங்கம், 3, தங்க மீன்கள், பாகுபலி, பலே வெள்ளையத்தேவா, வேலைக்காரன், தாமிரபரணி, டிராபிக் ராமசாமி, கோலி சோடா 2, மகாமுனி, விநோதன் உள்ளிட்ட பல படங்களில், ரோகிணி நடித்திருக்கிறார்.

துவக்கத்தில் இளம் வயதில், கதாநாயகியாக சில படங்களில் நடித்த ரோகிணி பிறகு அக்கா, அண்ணி கேரக்டர்களிலும், இப்போது அம்மா கேரக்டரிலும் நடித்து வருகிறார். சமூக சீர்திருத்தம், பெண்ணியம், பெண் உரிமைகள் குறித்த கருத்துகளை கொண்டவராக, தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

---- Advertisement ----

ரோகிணி
Rohini

படங்களில், இவரது நடிப்பு சிறப்பாக இருந்து வருவதால், 35 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் நீடித்து இருக்கிறார். நல்ல குரல் வளமும், பேசுகிற தொனியில் காட்டும் வசீகரமும் இவரை, நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தமிழ் சினிமா, பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது.

பல வெற்றிப்படங்களில் ரோகிணி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷால், சிவகார்த்திகேயன், பிரபாஸ், நயன்தாரா போன்றவர்களுக்கு அம்மா கேரக்டரில் நடி்ததவர் ரோகிணி. அதனால், அவரது தமிழ் சினிமா பயணம் தடையின்றி தொடர்கிறது.

கடந்த 1996ம் ஆண்டில் நடிகர் ரகுவரனை, ரோகிணி திருமணம் செய்துகொண்டார். ரகுவரன், தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கமலுக்கு நாசரை போல, ரஜினிக்கு வில்லன் என்றால் அது ரகுவரன்தான் என்பது, தமிழ் சினிமாவில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. பாட்ஷா படத்தின் வெற்றிக்கு ரகுவரனும் ஒரு முக்கிய காரணம் என்பதை, யாருமே மறுக்க முடியாது.

ரோகிணி
Rohini

ரகுவரனின் வில்லத்தனமான நடிப்பும், பேச்சும் ரசிகர்களை வசீகரப்படுத்தியது. குறிப்பாக அவரது ‘ஐ நோ’ டயலாக்கை தான் இன்றும் மிமிக்ரி கலைஞர்கள், அவரது குரலில் மேடைகளில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். துவக்கத்தில் வில்லனாக நடித்த ரகுவரன், ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, சிவாஜி போன்ற படங்களில் குணச்சித்திர நடிப்பையும் வழங்கினார்.

1996ம் ஆண்டில் நடந்த திருமணத்துக்கு பிறகு ரகுவரன், – ரோகிணிக்கு ரிஷிவரன் என்ற மகன் பிறந்தார். ஆனால் ரோகிணி- திருமண வாழ்க்கை எட்டு ஆண்டுகளே நீடித்த நிலையில், 2004ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விட்டனர். இப்போது, ரஷிவரன், ரோகிணி உடன் வசித்து வருகிறார்.

ரகுவரன் – ரோகிணி இருவருமே, நடிப்பில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நல்ல முதிர்ச்சி கொண்டவர்.குறிப்பாக ரோகிணி, புரிதல் நிறைந்தவர் எனும் பட்சத்தில் இப்படி ரகுவரனுக்கும், இவருக்கும் மனமுறிவு ஏற்பட்டது என்பதற்கான காரணம், இப்போது தெரிய வந்துளளது.

ரோகிணி
Rohini

ரகுவரன் நடித்த பல படங்களில் அவர் சிகரெட் புகைப்பவராக, மது அருந்துபவராக நடித்திருப்பார். சினிமாவில் மட்டுமின்றி, நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். படப்பிடிப்பு நேரம் தவிர, மற்ற நேரத்தில் போதையிலேயே இருந்த ரகுவரனை மாற்ற, திருத்த ரோகிணி எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.

ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போய், அவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 2004ம் ஆண்டில், ரகுவரனை விட்டு ரோகிணி பிரிந்த நிலையில், 2009ம் ஆண்டில், தனது 49 வது வயதில் ரகுவரன் காலமானார்.

இன்னும் சினிமாவில் பல உயரங்களை எட்டியிருக்க வேண்டிய ரகுவரன் மறைவு, தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் உண்மையிலேயே இழப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

---- Advertisement ----