அப்பா ஹாஸ்பிடல்-க்கு தனியாக போக இது தான் காரணம்..! – ரகசியம் உடைத்த மாரிமுத்து மகன்..!

நடிகர் மாரிமுத்துவின் மரணம் ரசிகர்களை ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். மட்டுமில்லாமல் அவரை சார்ந்து வெளியாகி கொண்டிருக்க கூடிய தகவல்கள் ரசிகர்களை இன்னும் ரணம் ஆக்கி இருக்கிறது.

இப்படி ஒரு மனிதனையா நாம் இழந்து விட்டோம் என்று பலரும் தங்களுடைய வருத்தங்களை இப்போதும் பதிவு செய்து வருகின்றனர்.

மாரிமுத்து தன்னுடைய மூச்சுத் திணறல் நேரத்தின் போது தொலைபேசியில் அவருடைய குடும்பத்தினரை தொடர்பு கொள்கிறார்.

ஆனாலும் ஏன் தனியாக அவர் மருத்துவமனைக்கு சென்றார். என்ற கேள்வி அவருடைய மகனிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அவரது மகன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது எங்களை அழைத்தது உண்மைதான்.

வீட்டில் இருக்கும் பொழுதே சில முறை இவருக்கு இதுபோல ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறோம். உடனடியாக சிகிச்சை எடுத்து எந்த பிரச்சினையும் இல்லாமல் மீண்டு வந்து இருக்கிறார்.

ஆனால் இந்த முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது வழக்கத்திற்கு மாறான வலியை உணர்வதாக கூறினார்.

எனவே, யாருக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டாம் நாங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டாம் உங்களால் கார் ஓட்ட முடிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே செல்லுங்கள். நாங்கள் வந்து விடுகிறோம் என்று கூறினோம்.

அதன் காரணமாகத்தான் என்னுடைய தந்தையே யாருக்காகவும் காத்திருக்காமல் தனியாக தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றார் என்று பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …