Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்ன.. கைய புடிச்சி இழுத்தியா..? வடிவேலு காமெடியால் உயிர்தப்பிய பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்..!

தமிழ் திரைப்படங்களில் பிரபலமான காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவர் இல்லாத திரைப்படங்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி கட்டாயம் இடம்பெற்றுவிடும்.

மதுரை சொந்த ஊராகக் கொண்ட நடிகர் வடிவேலு முதன்முதலில் ராஜ்கிரண் உதவியுடன் தான் சினிமா துறையில் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் வடிவேலு:

டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது ராஜ்கிரண் தான் என செய்திகள் கூறப்பட்டது .

அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், பின்னணி பாடகர், குணசித்திர நடிகர் இப்படி பல பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

---- Advertisement ----

குறிப்பாக இவரது காமெடி காட்சிக்கு இன்று வரை பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது காமெடியான பேச்சும் எதார்த்தமான எதார்த்தமான நடிப்பும் பாடி லாங்குவேஜ் இது எல்லாமே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தது.

சிறந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். ரஜினிகாந்த், அஜித், சூர்யா, விஜய், தனுஷ் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களின் திரைப்படங்களில் சேர்ந்து நடித்த நடிகர் வடிவேலுவுக்கு வைகைப்புயல் என்ற ஒரு அடையாளமும் பட்ட பெயரும் இருக்கிறது.

இதனிடையே கமிட் ஆகும் திரைப்படங்களில் ஒழுங்காக நடிப்பதில்லை, சைன் பண்ணும் படங்களுக்கு சூட்டிங் செல்வதில்லை.

பணத்தை வாங்கிவிட்டு பொய் சொல்லுவது, ஆணவம் அதிகமாகிவிட்டது என பலர் அவரை விமர்சித்து அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து விட்டார்கள்.

ஆணவத்தால் ஆடிய வடிவேலு:

அதனால் அவர் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் மீண்டும் மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

அது மட்டுமில்லாமல் அந்த ரோல் அவருக்கு மிகுந்த மரியாதை நிமித்தமான ரோலாக பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டுடன் இணைந்து நேர்காண ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது என்னுடைய காமெடி பார்த்து பெண் ஒருவர் உயிர் தப்பியது என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என வடிவேலு அந்த பேட்டி கூறியிருக்கிறார்.

நடந்த விஷயத்தை விரிவாக கூறிய வடிவேலு, மதுரையில் பெண் ஒருவர் தனது கணவருடன் கடுமையாக சண்டை போட்டு இருக்கிறார் .

இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மிகப்பெரிய அளவில் முற்றிப்போக கணவர் மனைவியை பார்த்து நான் வருவதற்குள் நீ செத்துப் போய் விடு என கூறிவிட்டு வெளியே கிளம்பி இருக்கிறார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தூக்கு கயிறு எடுத்துக்கொண்டு தூக்கு மாட்டி இறந்துவிடலாம் என முடிவெடுத்து கதவு கதவை பூட்டிக்கொண்டு சென்றாராம் .

பின்னர் அந்த சமயத்தில் தான் டிவியில் நான் நடித்த “நேசம் புதுசு” திரைப்படத்தின் “கைய புடிச்சு இழுத்தியா” என்ற காமெடி ஓடிட்டு இருந்து இருக்கு .

அதை பார்த்ததும் அந்த பெண் அந்த கயிறை போட்டுவிட்டு அமர்ந்து கொண்டு டிவியின் அருகே விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாராம்.

பெண்ணின் உயிரை காப்பாற்றிய வடிவேலுவின் காமெடி:

அங்கு இருந்த அக்கப் பக்கத்து வீட்டார் அந்த பெண் கயிறு எடுத்துக்கொண்டு கதவை சாற்றியதை பார்த்து போலீசுக்கு தகவல் கூறி அவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தர்களாம்.

அப்போது அந்தப் பெண் அவர்கள் வந்ததை கூட கவனிக்காமல் கயிறு அருகில் வைத்துக் கொண்டு டிவியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறாராம்.

அன்று மட்டும் அந்த காமெடி டிவியில் ஓடவில்லை என்றால் அவள் மரணித்திருப்பாள் தற்கொலை செய்து கொண்டிருப்பாள் அவரது குழந்தைகள் நடுத்தெருவில் நின்றிருக்கும் அனாதையாகி இருக்கும்.

என்னுடைய காமெடி காட்சி ஒரு பெண்ணின் உயிரையே காப்பாற்றியது என்றால் அது என் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

உடனே போலீஸ் அனைவரும் எனக்கு போன் செய்த நடந்த விஷயத்தை கூறினார்கள். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என வடிவேலு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top