Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..

Tamil Cinema News

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..

மிகச்சிறந்த பாடல்களை பாடிய பாடகி ரிஹானா அம்பானி வீட்டு திருமணத்தில் போட்ட ஆட்டத்தால் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் அனைவருமே உற்சாகத்தில் படு ஜோராக நடனம் ஆடி வேறு லெவலில் அந்த நிகழ்வினை தெறிக்க விட்டார்கள்.

இதையும் படிங்க: அனாதையா பையனோட நடு ரோட்ல நின்னேன்.. ஏன் இதை பண்ணனும் நெனச்சேன்.. தீபா கண்ணீர்..!


பாடகி ரிகானாவை பொருத்த வரை ஒன்பது கிராமி விருதுகள், 12 வீல் போர்ட் விருதுகள், 6 கின்னஸ் சாதனைகள் என இசை உலகில் ஒரு மகத்தான உச்சத்தில் இருக்கும் மிகச் சிறப்பான பெண்ணாக திகழ்கிறார்.

பாடகி ரிஹானா..

இவரது குரலுக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான பாடல்களை பாடி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பாடகி ரிஹானா அம்பானி வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வேறு லெவலில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டி இருக்கிறார்.


இவர் முகேஷ் அம்பானி நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்டட் திருமணத்தில் கலந்து கொண்டு பாடிய பாடல்கள் இந்திய ரசிகர்களை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

--Advertisement--

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானா..

அந்த அளவு தனது அற்புத குரலால் அனைவரையும் வசீகரித்து அம்பானி வீட்டு கல்யாணம் களைகட்ட இவரும் ஒரு காரணம் என்று சொல்ல வைத்து விட்டார்.

பாடிய பாடலுக்கு பாலிவுட் நடிகர்கள் மட்டுமல்லாமல் கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைவருமே ஆடி இருப்பது ஆச்சரியத்தை தந்துள்ளதோடு ரசிகர்களையும் ரசிக்க வைத்து விட்டது.

ரிஹானாவின் சொத்து மதிப்பு..

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் ரிஹானாவின் வருவாய் அதிகரிக்க ஆரம்பித்ததை அடுத்து அவர் வெளியிட்ட ரிலேட்டட் ஆர் என்ற ஆல்பம் விளம்பரத்தை அடுத்து லாட்ஸ் கேர்ள் ஆன் எர்ட் என்ற பயணத்தை மேற்கொண்டார்.


இந்த பயணத்தின் போது நடந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் 331 கோடி வருவாயை ஈட்டினார். அதன் பின்னர் ரிஹானா மேற்கொண்ட லவுட் டூர் இவரது வருவாயை இரண்டு மடங்கு உயர்த்தியதோடு சுமார் 745 கோடி பெற்று தந்தது.

இது போல 2013 ஆம் ஆண்டு டைமண்ட்ஸ் வேர்டு டூர் மூலமாக சுமார் 1100 கோடி வருவாயை ஈட்டிய இவர் 2014-ல் பிரபல இசையமைப்பாளரான எமினம் உடன் இணைந்து ஆறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 298 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதை அடுத்து சென்டி பியூட்டி என்று அழகு சாதன பொருட்கள் விற்பனையில் 2017 ஆம் ஆண்டு முதல் ஈடுபட ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம்.. வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.. கிருட்டு கிருட்டுன்னு வருதே…

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு நாலாயிரம் கோடி அளவிற்கு வருமானத்தை பெற்ற இவர் ஆடை விற்பனை தொழிலை தொடங்கி அதில் 2238 கோடி பெற்றிருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் மட்டும் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 152 மில்லியனாக உள்ளது.

அத்தோடு ஒவ்வொரு ஸ்பான்சர் பதிவிற்கும் ஊதியமாக ஏழு கோடி வழங்கப்பட்டு வருகிறது. ரிஹானாவின் பாடல்களை ஒளிபரப்புவதற்காக ராயல் டி ஆக மட்டும் 80 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிஹானாவின் மொத்த சொத்து மதிப்பு 11 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக தற்போது சொல்லப்படுகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top