செல்வன் வெற்றியை தொடர்ந்து வரலாற்றுப் படங்களை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் யாத்திசை என்ற வரலாற்றுத் திரைப்படம்.
இந்த திரைப்படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கி இருக்கிறார் மேலும் 6 ஸ்டார் என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் வீனஸ் இன்போடெயின்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் எந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது.
Yaathisaiஇந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வரும் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த திரைப்படத்தை ஆதரித்து வருவதோடு திரையரங்குகளை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.எனவே நல்ல படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணமாக உள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றுள்ள எந்த திரைப்படமானது வெளிவந்த மூன்று நாட்களில் சுமார் 1.37 கோடி அளவு வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிமுக நட்சத்திரபட்டாலங்கள் இல்லாமல் இந்த படமானது திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வெற்றியைப் பெற்று வருகிறது என்பது இந்த படத்திற்கான சிறப்பு தன்மையை கொடுத்துள்ளது.
Yaathisaiஇந்த படத்தின் மூலம் இயக்குனர் தரணி ராஜேந்திரனுக்கு ஒரு மிக நல்ல அடையாளம் கிடைக்கும் என்று கூறலாம். சிறிய அளவு பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து தரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையில் பாண்டிய மன்னரான ரணதீரனின் வரலாறு மிகச் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது பாண்டியர்களின் வீர வரலாற்றை பேசும் திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் கட்டாயம் இருக்கும்.
ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கரு அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள புது முகங்கள் அனைவருமே அவர்களின் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
Yaathisaiகுறிப்பாக பாண்டிய மன்னன் ரணதீரன் என்ற கேரக்டர் செய்த அறிமுக நாயகன் சக்தி மித்திரன் படத்தில் மிகச் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது போலவே எயினர்களின் படைக்கு தலைமை ஏற்று நடத்தும் கோபி என்ற கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் சேயோன் மிகச் சிறப்பாக தனது கேரக்டர் ரோலை செய்து ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் புது முகங்கள் இருந்தாலும் அவர்களின் நடிப்புத் திறன் மிக நேர்த்தியாக வெளிப்பட்டிருப்பது யாத்திசை திரைப்படம் எல்லா திசையிலும் வெற்றிவாகை சூடும் என்று கூறலாம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.