வெளிய வாங்க ப்ரோ..! மதன் கௌரியை வலை வீசி தேடும் நெட்டிசன்கள்.. – என்ன காரணம்..?

மதன் கௌரி ( Madan Gowri ) தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இருக்கின்றன.இருப்பினும்,சில சேனல்கள் மட்டுமே ஹிட் அடித்து வருகின்றனர். அந்த வகையில்,யூடியூப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் மதன் கௌரி.

ஆரம்பத்தில் விக்கிப்பீடியா தகவல்களை அப்படியே வாசிப்பதாக பலரால் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது பல தடைகளை தாண்டி முன்னேறி கொண்டிருக்கிறார்.மதன் கௌரி, யாரும் அறிந்திராத பல வெளிநாட்டு, உள்நாட்டு சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக பேசி வீடியோவாக வெளியிடுபவர்.

இந்த சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது என அவரே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தனது நீண்ட நாள் காதலியான நித்யா என்ற பெண்ணை தற்போது கரம் பிடித்துள்ளார்.

திமுக ஆட்சி அள்ளுதுங்க..

இப்படி பிரபலமாக இருக்கும் மதன் கௌரியின் மீது சமீப காலமாக வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றது. சமீபத்தில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த இவரிடம் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் திமுக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் அவர் கூறியதாவது, கண்டிப்பா தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி சிறப்பான முறையில் செயல்பட்டுவருகிறது. இது என் கருத்து மட்டுமல்ல பொதுவான கருத்தும்கூட. இந்திய அளவில் நடந்த சர்வே கூட தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சி சிறந்து விளங்குவதாக தெரிவித்திருந்தது. அர்ச்சகர்கள், கோவில் நிலம் போன்ற விஷயங்களில் மிக தைரியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.

இருப்பினும் ஆட்சி ஆரம்பமாகி எட்டு மாதகாலம் மட்டுமே ஆகியுள்ளது. போகப்போக இதே நல்லாட்சி தொடருமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறி இருந்தார்.

வெளிய வாங்க மதன் கௌரி…

இந்தியாவில் எந்த ஒரு பெண்ணுக்கும் அநீதி என்றால் முதல் ஆளாக வீடியோக்களை வெளியிட்டு தன்னை பின் தொடர்பவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார். ஆனால், தமிழ்நாட்டில் நடந்தால் மட்டும்…???? வாயே திறப்பதில்லை என்ற குற்ற சாட்டு சமீப காலமாக அவரை பின்தொடர்பவர்களால் வைக்கப்படுகின்றது.

இப்படி யாராவது கேள்வி கேட்டால் அவர்களை ப்ளாக் செய்து விடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளாராம் மதன். இதற்கு என்ன காரணம், என்று மதன் கௌரி தன்னுடைய விளக்கத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் அவரை பின் தொடர்பவர்களின் பொதுவான குரலாக உள்ளது.

வெளிய வருவாரா.? என்று பொறுத்திருந்த பார்ப்போம்..

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!