யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு ஏ ஆர் ரகுமான் ரசிகன் என – ஏ ஆர் ரகுமான் பேச்சு… இணையத்தில் வைரல் ஆச்சு!

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின்  இசை பயணம் பற்றி நாம் பேசவே வேண்டாம். நெடிய இசை பயணத்தில் நிறைய விருதுகளை வாரி குவித்திருக்கிறார். தற்போதுதான் இவரது இசையில் வெளிவந்துள்ள இரவின் நிழல், கோப்ரா மற்றும் வெந்து தணிந்தது காடு. இதில் வித்தியாசமான இசை மற்றும் பாடலை நாம் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் பார்க்கலாம்.

 இதனைத் தொடர்ந்து இந்தியாவே எதிர்பார்த்து இருக்க கூடிய மிகப் பிரம்மாண்டமான தமிழர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளி வர உள்ளது இந்த படத்திற்கும் இசை நமது ஏ ஆர் ரகுமான் அமைத்து இருக்கிறார். இவரின் இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இதில் உள்ள பாடல்களை கேட்பதற்கும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் ஒரு பேட்டியில் ஏ ஆர் ரகுமான் பேசும்பொழுது கீபோர்ட் கற்றுக் கொள்வதற்காக இவர் இசைஞானி வீட்டிற்கு சென்ற போது இவருக்கு 16வயதாகும் யுவனுக்கு ஏழு வயதாக இருந்ததாம்.

 சிறுவயதிலிருந்தே யுவனுக்கு பைலட் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. எனினும் பள்ளிக்கூடத்தில  ஸ்டார் கிட் என்ற அந்தஸ்து கொடுத்து தான் பார்த்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமானின் வரவு இவனுக்கு ஒரு பின்னடைவை தந்திருக்கிறது.

 இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் உன்னுடைய அப்பாவின் சாம்ராஜ்யம் அடியோடு தகர்ந்து விட்டது. இனி எல்லாமே ஏ ஆர் ரகுமான் தான் எனவே உனக்கு பைலட்டாக வேண்டுமா? அல்லது ஆர் ரகுமானை விட உயர வேண்டுமா என்று கேள்வி எழுப்ப  இவன் பைலட் கனவை விட்டுவிட்டு இசை அமைப்பாளராக உருவெடுத்தார்.

எனவே யுவன் மீது எப்போதுமே ஏ ஆர் ரகுமானுக்கு அதிக பாசம் உண்டு. எனவே தான் அவர் படத்தில் உள்ள பாடலுக்கு அவரை பாடவைத்து அழகு பார்த்திருந்தார். அடுத்து ஆஸ்கர் இந்தியாவில் யாருக்கு கிடைக்க வேண்டும் எனகேட்ட போது யுவனுக்கு கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பது ரகுமான் யுவன் மீது கொண்ட பாசத்தின் வெளியீடு.

 மேலும் ஒரு பேட்டியில் அவர் யுவனின் குரலில் ஒரு ஈரம் இருக்கிறது நான் அவருடைய ரசிகன் என்று கூறியிருக்கிறார் கூறியிருப்பது இன்று வைரலாகி உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …