அது கசப்பு.. இது இனிப்பு.. பவதாரணி குரலில் GOAT 2nd சிங்கிள்..! மனமுடைந்த யுவன் ஷங்கர் ராஜா..!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று படத்தின் ரிலீசுக்கான ஆன வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்புடன் GOAT பட வேலைகள்:

இந்நிலையில் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நான் ரெடி என பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது.

கூடவே சில பல சர்ச்சைகளையும் அந்த பாடல் சந்தித்திருந்தது. அடுத்ததாக நேற்று விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாவது சிங்களான சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியாகிருந்தது

இதில் அப்பா விஜய் மற்றும் சினேகா மகன் விஜய் என மூன்று பேருடன் குடும்ப காதலை மையப்படுத்தி இந்த பாடல் வெளியாகியிருந்தது.

இரண்டாவது சிங்கிள் பாடல்:

இது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த பாடல் ஒரே நாளில் YouTube ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடுத்தக்கது .

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரசாந்த் , பிரபுதேவா , வைபவ் , மீனாட்சி சவுத்ரி , சினேகா, லைலா , மோகன் உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் .

இப்படத்திற்கு பல வருடங்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பது தான் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது .

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் திரையரங்கில் வெளியாக திட்டமிட்டுள்ளனர். இப்படியான நேரத்தில் படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருப்பது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் வாழ்த்தி உள்ளது.

விஜய்யின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் :

நேற்று (ஜூன் 22) 6:00 மணிக்கு விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது சிங்களான சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே 5: 30 மணிக்கு இந்த பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களை இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த பாடலை விஜய் உடன் சேர்ந்து மறைந்த பிரபல பாடகியின், இளையராஜாவின் மகளுமான பவதாரணி பாடி இருப்பதாக செய்திகள் வெளியாகி அது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது .

பிரபல பாடகியான பவதாரணி சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறை காரணமாக மரணம் அடைந்து விட்டார்.

வேதனையில் யுவன்:

இந்தப் பாடலை குறித்து யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த மன வருத்தத்தோடு பவதாரணி குறித்து பதிவிட்டு இருக்கிறார் .

அதாவது இப்பாடலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பவதாரணி வாய்ஸை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்.

முன்னதாக நாங்கள் இப்படத்தின் வேலைக்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்து பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த பாடலை பவதாரணி வைத்து பாட வைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.

அவர் உடல்நலம் தேறி வந்த உடன் இந்த பாடலை ரெக்கார்ட் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார்.

கசப்பான இன்பம்:

இது எங்களுக்கு மிகுந்த மன அதிர்ச்சியை தந்தது. இதனால் மனமுடைந்து போனோம். இதனால் எப்படியாவது பவதாரணியின் வாய்ஸ் இந்த படத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம்.

அதன்படி, ஏ ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் பவதாரணியின் வாய்ஸை வைத்து இந்த பாடலை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

இது போன்ற “ஒரு கசப்பான மற்றும் இன்பம் தரும்” நிலை எங்களுக்கு ஏற்படும் என நாங்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனம் உடைந்து மிகுந்த உருக்கத்தோடு பேசி இருக்கிறார்.

அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் எல்லோரும் பவதாரணி இந்த வாய்ஸ் மூலமாக அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

ரஜினி விஜய்யால கூட இதெல்லாம் பண்ண முடியாது.. மம்முட்டிக்கிட்ட கத்துக்கணும்!. வியந்துப்போன இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் நடிகர்களின் உயரம் என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து கணிக்கப்படுகிறது. எந்த நடிகர் தமிழ் சினிமாவிலேயே அதிக …