பிக்பாஸ் சீசன் 3 - இவர் தான் அந்த 17-வது போட்டியாளர்..!


நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஹெபா படேல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் தங்களது வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகளைக் கூறி அழ வைத்த போட்டியாளர்கள், இரண்டாவது வாரத்தில் சண்டையிட்டுக் கொண்டனர். கலகத்தில் இருந்த வீடு இந்தவாரம் மீண்டும் கலகலப்பாக மாறியுள்ளது.

தமிழில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை வரும் 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இம்முறை நடிகர் நாகர்ஜுனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சிலரது பெயர்கள் தெலுங்கு ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் திருமணம் எனும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த ஹெபா படேல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.