தொகுப்பாளினி மகேஸ்வரியா இது..? - இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்


ஜி தமிழ் சேனலில் பேட்டராப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி. டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ளவர் ஆவார். 

சன் மியூசிக் என்ற தொலைகாட்சியில் பல ஆண்டுகால தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் தனது குடும்ப வாழ்க்கை பற்றி சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அந்த பேட்டியில், ''மீடியாவில் இருக்கும் பெண்களை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என நிறைய பேர் சொல்வார்கள். நான் இந்த வேலைக்கு வந்த புதிதில் பலரும் என்னையே இப்படி கேட்டுள்ளார்கள். அந்த பயம் காரணமாக, எனக்கு சிறு வயதிலேயே என் பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். 

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, நான் விவாகரத்து செய்ய நேரிட்டது. அதன்பின், எனது மகனை நான் தனியாளாகவே வளர்த்து வருகிறேன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் சிங்கிள் மாம், என குறிப்பிட்டேன். 

அதற்கு ஒரு பெண் ஏன் இப்படி உங்க அடையாளத்தை வெளியே காட்டிக்கறீங்க, எனக் கேட்டார். என் அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்வதில் எனக்கு ஒரு கவலையும் இல்லை. 


உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று அவரிடம் சொன்னேன். இதுதவிர, எங்கு பார்த்தாலும், உங்க வயசு என்ன, இவ்ளோ குண்டா இருக்கறீங்க, என்பது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள். 


அவர்களை பார்த்து ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். பெண்களின் வாழ்க்கை உள்ளுக்குள் பல சோகங்களை கொண்டதாகும். நாங்கள் சந்திக்கும் உடலியல் பிரச்னைகள் ஏராளம். அதையெல்லாம் கடந்துதான் வெளியே வருகிறோம். எங்களை இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தாதீர்கள்" என்று பேசி நெகிழ வைத்தார். 

இந்நிலையில், உடல் எடை குறைத்து ஃபிட்டாக மாறியுள்ள அவர் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

v>

தொகுப்பாளினி மகேஸ்வரியா இது..? - இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள் தொகுப்பாளினி மகேஸ்வரியா இது..? - இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள் Reviewed by Tamizhakam on September 09, 2019 Rating: 5
Powered by Blogger.