மீண்டும் பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம் - ரசிகர்களுக்கான செம்ம அப்டேட்


இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுதும் பேசப்பட்டது. இந்திய சினிமாவிலேயே இதுவரை அதிக வசூல் செய்த வெகு சில படங்களில் பாகுபலியும் ஒன்று.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகியது. இதனை தொடர்ந்து, பாகுபலிபடத்தின் மூன்றாம் பாகம் வருமா.? என்ற கேள்விக்கு " பாகுபலி முடிந்து விட்டது. இனிமேல் பாகுபலி தொடர் நிச்சயம் வராது" என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டார் இயக்குனர் ராஜமௌலி.

இந்நிலையில், பாகுபலி படத்தின் முதல் பாகத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழகம் முழுதும் ரிலீஸ் செய்யவுள்ளனர். இதில், சவுன்ட் எஃபெக்டுகள் மற்றும் சில இடங்களில் VFX வேலைகளை மெருகேற்றி உள்ளார்களாம்.


திரையரங்குகளில் ராஜ்ஜியம் செய்த இப்படம் மீண்டும் திரையிடப்பட இருக்கிறதாம். வரும் நவம்பர் 22ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் படத்தின் முதல் பாகம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.

--Advertisement--
Share it with your Friends