இந்த நடிகரை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் - ஓப்பனாக கூறிய நடிகை ரைசா


பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விளம்பர பட நடிகையும், வடிவழகியுமான ரைசா வில்சன்.

இந்த நிகழ்ச்சியில் நல்ல பெயரும், வாங்காமல் கெட்ட பெயரும் வாங்காமல் வெளியே வந்து விட்டார் ரைசா. இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதே பிக்பாஸ் முதல் சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஹரிஷ் கல்யாண்-ரைசா. இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி நண்பர்களாக பழகி வந்தார்கள். 

இருவரும் சேர்ந்து ப்யார் பிரேமா காதல் என்ற ஒரு படத்தில் ஜோடியாகவும் நடித்திருந்தனர். இப்போது ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில், ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன், தமிழ்நாடு மக்களின் மகிழ்ச்சிக்காக என பதிவு செய்துள்ளார்.

இந்த நடிகரை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் - ஓப்பனாக கூறிய நடிகை ரைசா இந்த நடிகரை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் - ஓப்பனாக கூறிய நடிகை ரைசா Reviewed by Tamizhakam on December 08, 2019 Rating: 5
Powered by Blogger.