உடல் எடையை குறைக்க படாத பாடு படும் மனிஷா யாதவ் - வைரலாகும் ஜிம் வீடியோ..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 II, போன்ற படங்களில் நடித்தவர். 

இதனை தொடர்ந்து இவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். 

அதனை தொடரந்து இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் மனிஷா. இந்நிலையில் மனிஷா யாதவ் அளித்த பேட்டி ஒன்றில் நான் நடித்த முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்கள் படம், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. 

இந்தப்படங்கள் வாயிலாக மொத்த சினிமாவையும் கற்று கொண்டேன். "ஒரு குப்பைக் கதை" படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் மனிஷா. 

இந்நிலையில், உடல் எடை கூடி சற்றே பொசுபொசுவென ஆகிவிட்டார் அம்மணி. இப்போது, உடல் எடையை குறைக்க படாத பாடு பட்டு வியர்க்க விருவிருவிக்க உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


உடல் எடையை குறைக்க படாத பாடு படும் மனிஷா யாதவ் - வைரலாகும் ஜிம் வீடியோ..! உடல் எடையை குறைக்க படாத பாடு படும் மனிஷா யாதவ் - வைரலாகும் ஜிம் வீடியோ..! Reviewed by Tamizhakam on December 06, 2019 Rating: 5
Powered by Blogger.