சக நடிகையை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய பிரபல நடன இயக்குனர் - இளம் நடிகை புகார்..!


பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சரியா. இவர் தன்னை ஆபாச படம் பார்க்கும் படி கட்டாயப்படுத்துவதாக அவருடைய நடன குழுவில் இருந்த 33 வயதுடைய துணை நடிகை ஒருவர் பகீர் புகார் ஒன்றை கூயுள்ளார்.

ஆபாச படங்கள் பார்க்க சொல்வது மட்டுமல்லாமல், சம்பளத்திலும் கமிஷன் கேட்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் அந்த துணை நடிகை.

இது குறித்து, மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சரியா மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நடன இயக்குனரான ஆச்சாரியா ஆபாச படங்களின் வீடியோவை காண்பித்து தன்னை பார்க்குமாறு வற்புறுத்துகிறார். நான் பார்க்க மாட்டேன் என மறுத்தும் அவர் மீண்டும் மீண்டும் தன்னை வற்புறுத்துகிறார். 

மேலும், தனது வருமானத்தில் இறுத்து தனக்கு கமிஷன் கொடுக்கவேண்டும் என்றும் தொடர்ந்து அவர் தன்னை தொல்லை செய்வதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். இது பாலிவுட் வட்டராத்தில் அதிர்வலைகளை கிளப்பி விட்டுள்ளது.

இந்த நடன இயக்குனர் மீது முன்னதாகவே பல்வேறு புகார்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பியதாகவும் நற்பெயரைக் கெடுத்ததாகவும் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா இதற்கு முன் கடுமையாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Share it with your Friends