அட..! ரோபோ ஷங்கர் மகளுக்கும், தெறி பட வில்லன் தீனாவுக்கும் இப்படியொரு உறவு முறையா..? - இது தெரியாம போச்சே..!


ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். ரோபோ ஷங்கர் பிரபல தொலைகாட்சியில் ஸ்டாண்ட்-அப் காமெடியானாக இருந்து சினிமா நடிகரனாவர்.

இந்நிலையில், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவிற்கும், தெறி படத்தில் வில்லத்தனமான வேடத்தில் சில நிமிடம் நடித்த நடிகர் தீனாவிற்கு உள்ள உறவு முறை என்னவென்று இந்திரஜவே கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த "விருமாண்டி" படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் ,ரோபோ ஷங்கருக்கு மச்சான் முறையும், இந்திரஜாவிற்கு தாய் மாமன் முறையும் ஆகிறார். இதனை, தீனாவின் பிறந்தநாளன்று த்னது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார் இந்திரஜா.

அவர் கூறியதாவது, உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் "அப்பா". தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என கூரியுள்ளார்.


View this post on Instagram

A post shared by Indraja_sankar (@indraja_sankar) on

--Advertisement--
Share it with your Friends