போடு தகிட தகிட..! மாஸ்டர் இடை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை..! இங்கு தானாம்..! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!


நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். 

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. 

‘மாஸ்டர்’ படத்தில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்சேதுபதி என்ன பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற விவரம் வெளியாகவில்லை. 

அவர் எதிர்மறையான வேடத்தில் நடிக்கிறார் என்பது மட்டும் தெரியவந்தது. அதனை படத்தின் மூன்றாவது போஸ்டரும் உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. 

இந்த படத்திலிருந்து ஒரு பாடல் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறுகிறார்கள்.

இந்நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இந்த முறை சென்னையில் நடக்கவில்லை என்ற தகவலும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. ரசிகர்களின் மண்டை உடையும்அளவுக்கு பாதுக்காப்பு குறைபாடுகள் இருந்தன. மேலும், போலியான டிக்கெட்டுகள் மூலம் ரசிகர்கள் உள்ளே சென்று விட்டதால் ஒரிஜினல்டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களால் உள்ளே செல்ல முடியவில்லை என்ற புகாரும் இருந்தது.

மேலும், குறிப்பிட்ட கல்லூரி வளாகத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  நடத்த எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் நடந்தது. 

இதனால், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த முறை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு என்று நம்ப தகுந்த தகவல்கள் வந்துள்ளன. கோவையில் எந்த இடத்தில், எப்போது என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. 

விஜய்யின் கோட்டை என்று அழைக்கப்படும் கோவையில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடத்தப்படுவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

போடு தகிட தகிட..! மாஸ்டர் இடை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை..! இங்கு தானாம்..! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..! போடு தகிட தகிட..! மாஸ்டர் இடை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை..! இங்கு தானாம்..! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 22, 2020 Rating: 5
Powered by Blogger.