தனுஷ் மீது கேஸ் போடுவேன் - பழம்பெரும் நடிகர் எச்சரிக்கை..!


நடிகர் தனுஷ் காலில் பம்பரம் கட்டிக்கொண்டு நடித்து வருகிறார். வருடத்திற்கு இரண்டு படம் இறக்கி விடுகிறார். படம் ஹிட்டு, பிளாப்பு எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவரது படங்களுக்கு மினிமம் கியாரண்டி உள்ளது.

அத்தனை கோடி, இத்தனை கோடி என்ற பேச்சே கிடையாது. படம் என்ன கொடுக்கும். என்ன கொடுக்காது என தெரிந்து அதற்க்கேற்றார் போல விலையை நிர்ணயம் செய்து விற்று விடுகிறார்கள். படம் தோல்வியடைந்தாலும் யாருக்கு பெரிதாக நஷ்டம் என்ற நிலை வராமல் இருப்பதற்காக இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறார் தனுஷ்.

தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார் அவர். சுருளி, கர்ணன், Atrangi Re, கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஒருவேளை படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று தெரிந்தால் மட்டும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை இறக்கி விடுகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான் "நெற்றிக்கண்" திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளார் தனுஷ் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த படத்தின் கதாசிரியர் பழம்பெரும் நடிகர் விசு ஒரு பேட்டியில் பேசும் போது தனுஷ் "நெற்றிக்கண்" படத்தை ரீமேக் செய்ய வேண்டுமென்றால் கதாசிரியரான என்னிடம் அனுமதி வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார்.

தனுஷ் மீது கேஸ் போடுவேன் - பழம்பெரும் நடிகர் எச்சரிக்கை..! தனுஷ் மீது கேஸ் போடுவேன் - பழம்பெரும் நடிகர் எச்சரிக்கை..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.