இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா - குவியும் லைக்குகள்..!


தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய், தனுஷ் முதல் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் என பலருடன் நடித்துள்ளார். 

கால ஓட்டத்தில் இவரது மார்க்கெட் குறையவே மீண்டும் சின்ன சின்ன நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். வடிவேலுவுடன் கூட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் ஆகி கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார் அம்மணி. இப்போது திருமணம் முடிந்து 2 வருடங்கள் கழித்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் அவர் ஷேர் செய்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படம் வெளியாகி 19 மணி நேரத்தில் 1.50 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.


View this post on Instagram

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on
Advertisement

Share it with your Friends