விஜய் நடிப்பில் வெளியான இத்தனை படங்கள் ரீமேக் படங்களா..? - இதோ பட்டியல்..!


தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 9ம் தேதி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அது கொரோனாவால் தள்ளிப்போய் உள்ளது. 

புதிய ரிலீஸ் தேதி என்ன என்பது கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு தான் தெரியவரும்.விஜய் நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். 

அதேபோல் நிறைய ரீமேக் படங்களிலும் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் நடித்து ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்து பெரிய அளவில் லாபம் பார்ப்பார்கள். அப்படி விஜய் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், திடீரென விஜய் ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களின் டிவிட்டரில் மோதிக்கொண்டனர். இதில், #RemakeStarVijay என்ற ஹேஸ்டேக் இந்திய ஆளவில் ட்ரெண்ட் ஆனது. 

பெரும்பாலான விஜய்யின் ரீமேக் படங்கள் தெலுங்கு மொழியை சார்ந்து இருக்கும். கமர்சியல் அம்சங்கள் அதிகம் நிறைந்த திரைக்கதை தெலுங்கில் நிறைய உண்டு. அதனால், தெலுங்கில் ஹிட் அடித்த படங்களை அப்படியே இங்கே ரீமேக் செய்து சில காலம் நடித்து வந்தார் விஜய். ஒன்றல்ல, இரண்டல்ல ஒன்பது படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார்.

இதோ அந்த லிஸ்ட்..

 1. ஒக்கடு (தெலுங்கு) – கில்லி
   
 2. பாடிகார்ட் (மலையாளம்) – காவலன்
   
 3. போக்கிரி (தெலுங்கு) – போக்கிரி
   
 4. பவித்ர பந்தம் (தெலுங்கு) – பிரியமானவளே
   
 5. பிரண்ட்ஸ் (மலையாளம்) – பிரண்ட்ஸ்
   
 6. நுவ்வு நாகு நசவ் (தெலுங்கு) – வசீகரா
   
 7. அதனோக்கடே (தெலுங்கு) – ஆதி
   
 8. 3 இடியட்ஸ் (ஹிந்தி) – நண்பன்
   
 9. பெல்லி சந்ததி (தெலுங்கு) – நினைத்தேன் வந்தாய்

விஜய் நடிப்பில் வெளியான இத்தனை படங்கள் ரீமேக் படங்களா..? - இதோ பட்டியல்..! விஜய் நடிப்பில் வெளியான இத்தனை படங்கள் ரீமேக் படங்களா..? - இதோ பட்டியல்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.